மரத்தால் உருவான ராக்கெட் பாகம் விண்வெளிப் பயணத்திற்குச் சீன நிறுவனம் புதிய முயற்சி

2 Min Read
- Advertisement -

பெய்ஜிங், நவ. 8- விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைக்கும் நோக்கில், வெளிப்புறத்தில் ப்ளைவுட் மரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கெட் மூக்கு கூம்பை சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

ஜியாங்சு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு

சீனாவின் ஜியாங்சு மாகா ணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ‘லைட் இயர் எக்ஸ் ப்ளோரர்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளிப்புறத்தில் ப்ளைவுட் மரத்தைக் கொண்டு ராக்கெட் மூக்கு கூம்பை வடிவமைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் கடந்த 2ஆம் தேதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது.

ப்ளைவுட் – உலோகக் கட்டமைப்பு

வழக்கமாக அலுமினியம் அல்லது விலையுயர்ந்த கலப்புப் பொருட்களால் செய்யப்படும் இந்த பாகத்திற்குப் பதிலாக, 4.2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த புதிய கூம்பின் வெளிப்புறம் குறைந்த அடர்த்தி கொண்ட ப்ளைவுட் பலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடையைத் தாங்கும் வகையில் இதன் உள் பகுதியில் உறுதி யான உலோகச் சட்டகம் பொருத்தப்பட்டுள்ளது.

இணையான செயல்திறன்

எடை குறைப்பு, உறுதித் தன்மை, சத்தத்தைக் கட்டுப் படுத்தும் திறன் மற்றும் ரேடியோ அலைகளை ஊடுருவ விடும் தன்மை ஆகியவற்றில் இது வழக்கமான கூட்டுப் பொருட்களுக்கு இணையான செயல்திறனைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களுக்கும், பெரிய செயற்கைக்கோள்களை அடிக்கடி விண்ணில் செலுத்து வதற்கும் இது மிகவும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி
குப்பைகளுக்குத் தீர்வு

இந்தப் புதிய முறையால் ராக்கெட் பாகங்களைத் தயாரிப்பதற்கான செலவும் கால அளவும் கணிசமாகக் குறையும். மேலும், ராக்கெட் வளிமண்டலத்தை விட்டு வெளியேறிய பின் இந்தப் பாகம் பிரிந்து பூமிக்குத் திரும்பும்போது, உலோகங்களைப் போல விண்வெளிக் குப்பைகளை உருவாக்காமல் வளிமண்டல உராய்வில் முழுமையாக எரிந்து சாம்பலாகும் தன்மை கொண்டது.

அடுத்தகட்ட சோதனைகள்

தற்போது உருவாக்கப்பட் டுள்ள இந்த புதிய வடிவமைப்பு, வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு பல்வேறு கட்டத் தரச் சோதனைகள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *