புதுடில்லி, நவ.5- மத்திய அரசு விடுவித்துள்ள வரிப் பகிர்வு நிதியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்த மாக ரூ.18,534 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசம் என்ற ஒரே மாநிலத்துக்கு மட்டும் ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு மாநிலங் களுக்கு வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வழங்கும் வரிப் பகிர்வு நிதியுடன் கூடுதலாக, அக்டோபர் 31ஆம் தேதி ரூ.1,09,019 கோடியை விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப் படும் 2ஆவது கூடுதல் தவணை இதுவாகும்.
வரவிருக்கும் மத விழாக்களைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநில அரசுகள் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத் தவும், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவு களை மேற்கொள்ளவும் இந்தக் கூடுதல் நிதி விடு விக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மாநில வாரியான பட்டியலில் உத்தரப் பிரதேசத்துக்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது. அடுத்ததாக பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.8,010 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.7,866 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங் களைப் பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.4,597 கோடி, கருநாட காவுக்கு ரூ.4,504 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி, கேரளாவுக்கு ரூ.2,597 கோடி, தெலங் கானாவுக்கு ரூ.2,370 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களுக் கும் சேர்த்து மொத்தம் ரூ.18,534 கோடி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு 5 தென்னிந்திய மாநிலங் களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தொகையைவிட உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.674 கோடி கூடுதலாக வழங்கி இருக்கிறது.
