சென்னை, கொளத்தூர் விவேக் நகரில் வசித்து வந்த திராவிட இயக்கக் கொள்கையில் மாறாப் பற்றுக்கொண்ட பெரியார் பெருந்தொண்டர் சி.சின்னராசு (வயது 91) நேற்று (4.11.2026) காலை சாலை விபத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
இன்று காலை (5.11.2026) 8 மணியளவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மறைந்த சி.சின்னராசுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அவரது மகன் சி.பாசுகர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
வடசென்னை மாவட்ட கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், அரும்பாக்கம் சா.தாமோதரன், பெரம்பூர் – செம்பியம் பகுதிக் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி சி.பாசுகர், கொளத்தூர் அ.இல.ஜிந்தா மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
தான் மறைவுற்றால் மாலை வைப்பது உள்பட எவ்விதச் சடங்குகளும் நடத்திடக் கூடாது என்ற சி.சின்னராசுவின் வேண்டுகோளின்படி மூடச் சடங்குகள் ஏதுமின்றி இன்று காலை 10.30 மணியளவில் கொளத்தூர் இடுகாட்டில் அவரின் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
