திருச்சி விமான நிலையத்தை அதிர வைத்த போராட்டம்!

2 Min Read
- Advertisement -

திருச்சி, நவ.4- பத்து நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்துவதாக செம்பட்டு கிராம மக்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தபோது போராட்டம் நடத்தினர். போராடிய மக்களை சந்திக்காமல் ஜோசப் விஜய் கிளம்பியதால் போராட்டக்காரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் ஏராளமான மக்கள் உள்ளனர். அந்தப் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அருகிலேயே குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் அந்த இடங்களை ஒருவர் விலைக்கு வாங்கியதாக கூறி, அந்த மக்களை காலி செய்ய வேண்டும் என்று அறிவிக்கை வந்துள்ளது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தனியார் கல்லூரிக்காக, அரசு அதிகாரிகள் கிராமத்தையே காலி செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 10 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர். முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டை செல்வதற்காக 2.11.2026 அன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான தவெகவினர், விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் செம்பட்டு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்களும் ஜோசப் விஜய்யை சந்தித்து தங்கள் பிரச்சினையை முறையிட நின்றார்கள்.

விஜய்யின் காரை மறித்துப் போராடியதால் மனுவை மட்டும் அவர்களிடம் பெற்றுக் கொண்டு அவர்களிடம் பேசாமல் சென்றதால் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்த தெரிவித்த கிராம மக்கள் அமைச்சர் ரமேஷ், அதிகாரிகளிடம் முறையிட்டோம் எந்த நடவடிக்கை இல்லை. முதலமைச்சரை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. சந்திக்க விடாமல் அதிகாரிகள் தடுக்கிறார்கள். இங்குள்ள மக்கள் ஏழ்மையில் உள்ளார்கள். முதலமைச்சர் இதை தட்டிக் கேட்க வேண்டும்.

உங்களுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம். எங்களை பார்க்காமல் கூட சென்றால் எப்படி. எங்கள் பகுதியை காலி செய்யும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும். மக்களுக்கு நிரந்தர பட்டா கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *