சென்னை, நவ. 3– மத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக் கப்பட்ட தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில், புதிய தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் ஆளுநர் முன்னிலையில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் உள்ளன. இவர்களின் பத விக்காலம் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறை வடையும் வரை (எது முந்தையதோ அதுவரை) ஆகும்.
அண்மையில் தலைமை தகவல் ஆணையராக இருந்த முன்னாள் அய்பிஎஸ் அதிகாரி முகமது ஷகீல் அக்தர் மற்றும் வழக்குரைஞர் எம்.நடேசன் உள்ளிட்ட 4 ஆணையர்கள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசிதழில் புதிய நியமன அறிவிப்பை வெளி யிட்டது.
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், புதிய ஆணையர்களுக்கு ஆளுநர் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
மாநில தலைமை தகவல் ஆணையர்: டாக்டா் எஸ். நடராஜன்மாநில தகவல் ஆணையர்கள்: எஸ். மகாலட்சுமி, டாக்டா் டி.கே. ஷபீா், சி.பி. மீனா மற்றும் ஊடகவியலாளா் பி. மகாலிங்கம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநில தகவல் ஆணை யத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி, கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை சுமார் 38,046 மனுக்கள் விசாரணையின்றி நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆணையர்கள் பொறுப்பேற்றுள்ளதால் இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் வேகம் பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
