“முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாட்டுப் பெண்கள் எச்சரிக்கை மணி…” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ.1 “முதலமைச்சர் விஜய்க்கு ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் இருக்க வேண் டும் என்பதற்கான எச்ச ரிக்கை மணியை தமிழ் நாட்டுப் பெண்கள் அடித்து விட்டனர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (31.10.2026) நடைபெற்றது.

இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாடு முழுவதும் நேற்று திமுக மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்கள் வீடுகளின் மின் கட்டண ரசீதையும், மளிகைப் பொருள் ‘பில்’லையும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம் தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ‘ஷோ’ காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம், ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியை தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர். அவர்களின் ‘வேக் அப் கால்’ (Wake Up Call)-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *