திருப்பத்தூர், நவ. 3- சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் கொள்ளுப் பெயரனும், திருப்பத்தூர் மாவட்டக் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் – அகிலா ஆகியோரின் பெயரன் டி.கே.விஷால் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசியா அளவில் இரண்டு பதக்கங்களையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாதனையாளராக நாட்டிற்கும், சொந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதை பாராட்டும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் தலைமையில் 30.10.2026 மாலை 6.00 மணியளவில் விஜய சரவண மகாலில் நடைபெற்றது.
கழகக் தோழர்கள் அனைவரும் இணைந்து அவர் சாதனையைப் பாராட்டி பயனாடை அணிவித்து பெரியார் படம் பொருந்திய கேடயம் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
இந்நிகழ்வில் எ. அகிலா (மாநிலப் பொருளாளர் மகளிரணி) அண்ணாசரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்) சி. தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர், ப.க.) காளிதாஸ் (நகரத் தலைவர்) கவிஞர் சுப்புலட்சுமி, எம்.என்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி), கோ. அன்புச்சேரன் (நகர தலைவர் வாணியம்பாடி) பெ. ரா.கனகராஜ், (கந்திலி ஒன்றியத் தலைவர்) கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப. க.), கோ. இராஜேந்திரன், (பொதுக்குழு உறுப்பினர்), தி. நவநீதம் (மாவட்ட மகளிரணி செயலாளர்) சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளை தலைவர்) க. முருகன் (நகர இளைஞரணிஅமைப்பாளர்), அன்பு (மாவட்ட மாணவர் கழகம்) மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
மேலும் இதில் ரோட்டரி சங்கம், காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை, கம்பன் கழகம், கற்பிபயிலகம் சார்ந்த பொறுப் பாளர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
