60ஆவது மணநாள் காணும் (14.9.2026) பெரியார் பெருந் தொண்டர்கள் வேலூர் என்.கே.சுப்ரமணியம்-ஜி.சுகுணாபாய் இணையர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், செய்யாறு மாவட்ட கழகத் துணைத்தலைவர் அ.நாகராசன் ஆகியோர் கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். “நம்ம தலைவர் ஆசிரியர் நல்லாயிருக்காங்களா? எங்கள் மகள் பூவழகி திருமணத்தை ஆசிரியர் அய்யா நடத்தி வைச்சாங்க, அப்பல்லோ மருத்துவமனையில் நான் இருந்தபோது, வந்து பார்த்துட்டு போனாங்க. ஆசிரியர் நல்லாயிருக்கனும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சுகுணாபாய் சுப்ரமணியம்.
