புதுடில்லி, நவ.1 ‘இண்டியா’ கூட்டணி சார்பில் டில்லியில் மாதிரி நாடாளு மன்ற கூட்டம் நேற்று (31.10.2026) நடத்தப் பட்டது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி யில் (எஸ்அய்ஆர்) பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப் பதாக ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வரு கின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘இண்டியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டில்லி வீட்டில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் கூட்டத்துக்கு தலைமை வகித் தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ்அய்ஆர் பணியின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப் பட்ட பலரும் கூட்டத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
எஸ்அய்ஆர் பணியை முழு மையாக ரத்து செய்ய வேண் டும். நாடாளுமன்ற ஒப்புதல் அனுமதி இன்றி படிவ படிவம் 6-இல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்அய்ஆர் பணியின்போது திட்டமிட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பொது கண் டன விசாரணை நடத்தக் கோரு கிறேன். அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக் கல் செய்கிறேன். எஸ்அய்ஆர் விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ் வாறு கார்கே பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
எஸ்அய்ஆர் பணியின்போது சுமார் 13 கோடி வாக்காளர் களின் பெயர்கள் நீக்கப் பட்டன. இதன்படி இந்திய வாக்காளர்களில் 15 சதவீதம் பேரின் பெயர்கள் நீக்கப் பட்டிருக்கிறது. அண்மையில் நடந்த பேரவைத் தேர்தல்களில் வாக்குத் திருட்டில்” ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் தன்னை காப்பாற்றி விடுவார்கள் என்று ஞானேஷ் குமார் நம்புகிறார். ஆனால் மக்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
மொத்தம் 3.23 மணி நேரம் மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது. இதில் 19 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 215 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாதிரி நாடாளுமன்ற கூட் டத்தின் இறுதியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
