அட்லாண்டா, நவ. 1- அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உக்ரைன் போர், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல், தென் சீனக் கடல் விவகாரம் மற்றும் தென் ஆப்பிரிக்காவை அமெரிக்கா அழைக்காதது போன்ற பல முரண்பாடுகள் எதிரொலித்தன. கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று (31.10.2026), உலகளாவிய முக்கிய பாதுகாப்பு விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.
உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களில் நாடுகளிடையே நிலவிய கடுமையான கருத்து வேறுபாடுகளே இதற்கு முக்கிய காரணம். கூட்டத்தின் முடிவில் வழக்கமாக வெளியிடப்படும் கூட்டு அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விவாதங்களை சுருக்கி, தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அய்ரோப்பிய தூதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாரம்பரிய குழு ஒளிப்பட நிகழ்வை ரூபியோ ரத்து செய்தார். செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றால் ஒளிப்படம் எடுக்கும் போது தாங்கள் அனைவரும் வெளியேறுவோம் என அய்ரோப்பிய குழுவினர் மிரட்டல் விடுத்ததால் குழு புகைப்பட நிகழ்வு தவிர்க்கப்பட்டது.
