சாமி நாயக்கன்பட்டி, நவ. 1- நேற்று (31.10.2026) சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி அருகில் உள்ள சாமி நாயக்கன்பட்டியில் மாவட்ட கழக மேனாள் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் அவரது மக்கள் செல்வங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது சிலையை கழக காப்பாளர் பழநி. புள்ளையண்ணன் தலை மையில், சேலம் அம்மணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் இரா. சரவணன் முன்னிலையில் க.கிருஷ்ணமூத்தி அவர்களின் வாழ்விணையர் இராஜேஸ்வரி திறந்து வைத்தார். நிகழ்விற்கு மாவட்ட கழகக் காப்பாளர்கள் கி.ஜவகர், சிந்தாமணியூர் சி சுப்பிரமணியன், ஆத்தூர் விடுதலை சந்திரன், மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா பாலு, செயலாளர் ப.கலைவாணன், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, ஆத்தூர் மாவட்டக் கழகத்தின் தலைவர் அ.சுரேஷ், மாவட்ட செயலாளர் நீ சேகர், ஆகியோர் கலந்து கொண்டனர். வந்திருந்த கழகத் தோழர் களையும், உறவினர்களையும் அவரது பிள்ளைகள் கண்மணி, அன்புச் செல்வி ஆகியோர் வரவேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
க.கிருஷ்ணமூர்த்தி அவர் களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவரது குடும் பத்தினர் சார்பில் ரூ.5000 அளித்தனர்.
