சாமி நாயக்கன்பட்டியில் க.கிருஷ்ணமூர்த்தி சிலை திறப்பு

1 Min Read
- Advertisement -

சாமி நாயக்கன்பட்டி, நவ. 1- நேற்று (31.10.2026) சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி  அருகில் உள்ள சாமி நாயக்கன்பட்டியில் மாவட்ட கழக மேனாள் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் அவரது மக்கள் செல்வங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது சிலையை கழக காப்பாளர் பழநி. புள்ளையண்ணன்  தலை மையில், சேலம் அம்மணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் இரா. சரவணன் முன்னிலையில் க.கிருஷ்ணமூத்தி அவர்களின் வாழ்விணையர் இராஜேஸ்வரி திறந்து வைத்தார். நிகழ்விற்கு  மாவட்ட கழகக் காப்பாளர்கள் கி.ஜவகர், சிந்தாமணியூர் சி சுப்பிரமணியன், ஆத்தூர் விடுதலை சந்திரன், மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா பாலு, செயலாளர் ப.கலைவாணன், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, ஆத்தூர் மாவட்டக் கழகத்தின் தலைவர் அ.சுரேஷ், மாவட்ட செயலாளர் நீ சேகர், ஆகியோர் கலந்து கொண்டனர். வந்திருந்த கழகத் தோழர் களையும், உறவினர்களையும் அவரது பிள்ளைகள் கண்மணி, அன்புச் செல்வி ஆகியோர் வரவேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

க.கிருஷ்ணமூர்த்தி அவர் களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவரது குடும் பத்தினர் சார்பில் ரூ.5000 அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *