சேலம், நவ. 1- சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபத்தில் 30.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மாவட்டச் செயலாளர் மூனாங்கரடு பெ.சரவணன் வரவேற்க மாவட்டக் கழகத் தலைவர் வீரமணி ராஜூ தலைமையில் நடந்தது.
வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார் (மாவட்ட ப.க.செயலாளர்), டாக்டர் என்.ராஜேந்திரன் (அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய கழகத் தலைவர்), க.கமலம் (பொதுக்குழு உறுப்பினர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் அவர்கள் தனது சிறப்பு வழிகாட்டுதல் உரையில்
“பெரியார் அறிவுலகம்” கண்ட திராவிட நாயகர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மக்களின் முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற 04.11.2026 புதன் மாலை தகைசால் தமிழர் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நன்றி பாராட்டும் விழா தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் சார்பாக கோவை வ.உ.சி. மைதானத்தில் நடக்கிறது.
அந்த நன்றி பாராட்டும் கூட்டத்தில் கருங்கடல் அலையென கருஞ் சட்டைப் படை தமிழர் தலைவரின் ஆணைக்கிணங்க கூடி திராவிட மாடல் ஆட்சி தந்திட்ட நம் மக்களின் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டுவோம் எனக் கூறி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தோழர்களும் கலந்து கொள்கின்றனர்
வரும் 02.12.2026 அன்று 94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் தோழர்கள் திரளாக பெரியார் திடலில் கலந்து கொண்டு ‘அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம்‘ என செம்மாந்து ஆசிரியரிடம் வாழ்த்து பெற கூடிடுவோம் அதுசமயம் ஆசிரியர் அவர்களின் உயிர் மூச்சான
“விடுதலை” நாளிதழின்
100 சந்தாக்கள்
சேலம் மாவட்டத்திலிருந்து அளிப்போம் என மொழிந்ததை ஏற்று அதை தீர்மானமாக நிறைவேற்றியது.
தற்சமயம் சந்தா கொடுக்க விரும்புபவர் விவரம்
கி.ஜவகர் காப்பாளர் 6 மாத சந்தா 5, வீரமணிராஜூ மாவட்டத் தலைவர் ஆண்டு சந்தா 20, மூனாங்கரடு பெ சரவணன் மாவட்டச் செயலாளர் ஆண்டு சந்தா 8, ச.கோமதி மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் 2, அ.இ.தமிழர்தலைவர் மாவட்ட துணைசெயலாளர் 5, அ.ச.இளவழகன்மேனாள் மாவட்ட தலைவர் 5, ச.சுரேஷ்குமார் மாவட்ட ப.க.செயலாளர் 5, அரங்க இளவரசன் மாநகர தலைவர் 3, ஜெ.காளியப்பன் வீரபாண்டி (ஒ) தலைவர் 5, மரு.என்.ராஜேந்திரன் அயோத்தியாபட்டணம் ஒன்றியத் தலைவர் 5, குமாரதாஸ் அம்மாப்பேட்டை பகுதித் தலைவர் 3, இமயவரம்பன் மாவட்ட துனைத் தலைவர் 2, போலீஸ் ராஜூ சூரமங்கலம் பகுதிச் செயலாளர் 2, க.கமலம் பொதுக்குழு உறுப்பினர் 1, வழக்குரைஞர் செல்வகுமார் 1, எல்.தங்கராஜ் பெரியார் பெருந்தொண்டர் 1, ச.கனிமொழி மகளிர் பாசறைத் தலைவர் உண்மை 1 மாடர்ன் ரேசனலிஸ்ட் 1 (மற்ற கழகத் தோழர்களை சந்தித்து சந்தாக்களை பெறவும் முடிவு)
மாவட்ட அளவில் மாநகர பகுதி கழகங்கள் ஒன்றியக் கழகங்கள் கிளைக் கழகங்கள் புதியதாக கட்டமைப்புகள் உருவாக்குவதின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்க அதைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
உடன் அஸ்தம்பட்டி பகுதி கழகத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்
வழக்குரைஞர் செல்வகுமார் – அஸ்தம்பட்டி பகுதித் தலைவர்
மணிமாறன் – அஸ்தம்பட்டி பகுதிச் செயலாளர்
சு.சுரேஷ்குமார் எம.பி.டி. அஸ்தம்பட்டி பகுதி துணைச்செயலாளர்
மாவட்ட இளைஞரணி சாலமன் ராஜூ – இளைஞரணி துணைத் தலைவர்
யு.சக்திவேல் – இளைஞரணி துனைச் செயலாளர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி படிப்பகத்திற்கு நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள்
பழ.நாகராஜன், தொல்காப்பிய அரசு, குறள் அமுது, மு.கவுதமன், சிவப்பிரியன்
விடுதலை வாசகர் வட்டத்திற்கு நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டவர்கள்
கணபதி, மா.சண்முகம், அ. செழியன், இரா.புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி
முன்னரே, கழகத் தோழர் வழக்குரைஞர் செல்வகுமார் அவர்களின் தந்தையார் சி.எம். ராஜூ அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் – எல்.தங்கராஜ், ச.கோமதி, போலீஸ் ராஜூ, க.குமார தாசன், செல்வகுமார், சாலமன், சாந்தி, ச.கனிமொழி நிறைவாக குமாரதாசன் நன்றியுரை கூற நிறைவுற்றது.
