6 மாதத்தில் 23 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி மாற்றம்!

1 Min Read
- Advertisement -

லக்னோ, அக். 27- உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணி புரிந்தவர் ரவிக்குமார் திவாகர். இவர் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் 11 வழக்குகளில் 23 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தார். அவருடைய தீர்ப்பு நடவடிக்கை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே, இவருடைய விரைவு நீதிமன்றத்தில் பாதியளவு விசாரிக்கப்பட்டிருந்த கொலை உள்ளிட்ட 97 முக்கிய வழக்குகள், கடந்த ஆகஸ்டு மாதம் மாவட்ட முதன்மை நீதிபதியால் நிர்வாக உத்தரவு மூலம் திடீரென வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இதற்கு அண்மையில் போதைப்பொருள் வழக்கு ஒன்றின் தீர்ப்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நீதிபதி ரவிக்குமார் திவாகர், சட்டம் வகுத்த நடைமுறைகளை மீறி நிர்வாக உத்தரவால் வழக்குகளை எப்படி மாற்ற முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் மாவட்ட நீதிபதிகளின் அதிகார வரம்பு மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும் கவலை தெரிவித்தார். இந்த மோதல் போக்கிற்கு இடையே, ரவிக்குமார் திவாகர் திடீரென முசாபர்நகர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு கூடுதல் முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிபதி ரவிக்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது உத்தரப்பிரதேச நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக சிவகுமாரி விரைவு உயர்நீதிமன்றம் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *