புதுடில்லி, அக்.25- மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு நடத்துவதில் முறைகேடு கள் நடந்ததாகக் குற்றஞ் சாட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.
தடை உத்தரவுகளைமீறி, போராட்டக்காரர்கள் தொடர்ந்து மைதானத்தில் இருந்ததாக குற்றம் சாட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்தமனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், மனுதாரர் போராட்டக் காரர்களிடையே இருந்தார் என்பதற்காக மட்டுமே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை களைத் தொடர முடியாது என்று கூறியுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றார் என்பதால் அவர் சட்டபூர்வ உத்தரவு களை மீறியதாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
