பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் துர்கா பூஜை ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மீது கொலைவெறித் தாக்குதல்!

- Advertisement -

லக்னோ, அக்.25  துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பலியாவில் கார்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாய் ஸ்தான் அருகே அக்டோபர் 21 ஆம் தேதி துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது  அங்கு நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பப்பு மற்றும் பங்கஜ் குமார் ஆகியோரை தடிகளும், ஆயுதங்களும் ஏந்தியிருந்த ஒரு கும்பல் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியுள்ளது.

அப்போது அரிந்திரா, அஜித் ஆகிய மேலும் இரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தலையிட்டுள்ளனர். இதில் நால்வரையும் ஆயுதங்களால் அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியதாகவும், இதில் நால்வரும் காய மடைந்தனர் எனவும் காவல்துறை இன்று தெரிவித்துள்ளது

6 பேர் மீது வழக்குப்பதிவு

இத் தொகுதியில் ஈடுபட்ட சுபாஷ் ராஜ் பார், முகேஷ் ராஜ் பார், பிரதீப், அபய், பிரின்ஸ் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஆறு குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ் சர்மா தெரிவித்தார்.

இந்நிகழ்வு குறித்த விசாரணை நடை பெற்று வருவதாக சதீஷ் (சர்மா) மேலும் தெரிவித்தார். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.

உ.பியில் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்

உ.பி.யில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மீதான கும்பல் தாக்குதல் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் சீதாப்பூர் பகுதியில் உள்ள லுதவுரா கிராமத்திற்கு அருகே மனோஜ் கவுதம் என்ற 35 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் தனது 10 வயது மகளுடன் உள்ளூர் சந்தையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பலால், கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்.

இந்த மாதத் தொடக்கத்தில் ரேபரேலியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஹரியோம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *