திருப்பதி, அக்.5 திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்றத்துக்கான ஆயத்தப் பணியின்போது கொடிமரத்தின் வளையம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. 4.10.2024 கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரையில் போடா என்ற பெயரில் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. மேலும், திருப்பதி ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார். இந்த நிலையில், கொடி யேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணியின்போது தங்க கொடிமரத்தின் வளையம் உடைந்ததாகவும், அதனைச் சரிசெய்யும் பணியில் தேவஸ்தான அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக் கடவுளர் சக்தி இதுதான்! தன்னுடைய கோவில் கொடிமரத்தைக்கூட காப்பாற்றத் தெரியாத கடவுள் : திருப்பதி தங்கக் கொடிமரத்தில் சேதம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:சந்திரபாபு நாயுடு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
