திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாதாம்! : உயர்நீதிமன்றம்

- Advertisement -

மும்பை, அக்.25 மகாராட்டிராவில் அண்மையில் ‘மகாராட்டிரா மத சுதந்திரச் சட்டம் – 2026′ நடைமுறைக்கு வந்தது. இது, கட்டாயப்படுத்துதல், மோசடி, வற்புறுத்தல், தூண்டுதல், தவறான சித்தரிப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை குற்றமாக கருதுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 6-இன் படி, மதம் மாறும் முன் தனிநபர்கள், 60 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில், தானேவைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர், இச்சட்டத்தை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி.திரிபாதி, நீதிபதி அத்வைத் சேத்னா விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தச் சட்டம், அரசியலமைப்பின் 25ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தை பரப்புவதற்கான சுதந்திரத்தை கட்டுப் படுத்துவதாக வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்தச் சட்டம், சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், கட்டாயப்படுத்துதல் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை தடுக்கவும் கொண்டு வரப்பட்டது. ‘எவருக் கும், தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. ஆனால், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது’ எனக் கூறினர். இதனால் மனு திரும்பப் பெறப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *