‘‘இந்தியக் கல்விமுறை எல்லோருக்குமானது அல்ல!’’

- Advertisement -

ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி, அக். 19-  ‘‘இந்திய கல்வி முறை என்பது அனைவரையும் உள்ளடக்கியது அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களை வெளியே வைத்திருக்க வடிவமைக்கப்பட்டது’’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மாணவர்கள் சிலருடன் கலந்துரையாடிய காட்சிப்பதிவு இன்ஸ்டாகிராமில் பதி வேற்றப்பட்டுள்ளது. அதில், “நாட்டில் நிலவும் கல்வி முறை நம்பிக்கை தரக்கூடியது அல்ல. இது அனைவரையும் உள்ளடக்கியதும் அல்ல.

உங்களிடம் பணம், அதிகாரம் இல்லை யென்றால் அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், சிஸ்டம் உங்களை இரண்டாவது சிந்தனை இன்றி வெளியே தள்ளும். இதை நீங்கள் கல்விமுறை என்று அழைக்க முடியாது. இது ஒரு விலக்கு முறை. லட்சக்கணக்கான இளைஞர்களை வெளியே வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் குரல் நிகழ்ச்சி மூலம் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்து வருகிறார். கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே, இந்தூர் நகரங்களில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியை நடத்திய ராகுல் காந்தி அண்மையில் சென்னையில் அந்நிகழ்ச்சியை நடத்தினார்.

மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்கள் விரும்பும் தீர்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சி பேசுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் மாணவச் சமுதாயத்தின் குரலை தேசிய அளவில் ஒலிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை ராகுல் காந்தி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *