ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் அமெரிக்கா! ரஷ்யாவில் டீசல் ஏற்றிய கப்பல் நியூயார்க் சென்றது

1 Min Read
- Advertisement -

வாசிங்டன், அக். 24– அமெரிக்காவில் தாறுமாறாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நட வடிக்கையாக, ரஷ்யாவிடம் இருந்து முதல்முறையாக 40,000 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் நியூயார்க் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் பொருளாதாரத் தடை களுக்கு மத்தியிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்த விவகாரத்தில் ஒரு புதிய இணக்க மான ஒப்பந்தம் ஏற் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் நேரடி வெளிப்பாடாகவே இந்த வர்த்தகம் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, பிற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அல்லது எரிபொருட் களை வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகளும், 100 சதவீதம் வரை இறக்குமதி வரியும் விதிக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தது.

ஆனால், தற்போது அமெரிக் காவே தனது சொந்தத் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக டீசலை இறக்குமதி செய்திருப்பது பன்னாட்டு நாடுகளுக்கு மத்தி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. “மற்றவர்களுக்கு ஒரு நீதி, அமெரிக்காவிற்கு ஒரு நீதியா?” என்ற கேள்வியையும் இந்த நட வடிக்கை எழுப்பியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் எரிபொருள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பன்னாட்டுஅரசியல் அரங்கில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *