ஒன்றிய, மாநில அரசுகளின் ஊழியர்கள் பொதுவெளியில் அரசின் கொள்கைகளை விமர்சித்தால் நடவடிக்கை!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 24- தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் சோமசுந்தரம், அனைத்து அரசு அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973 விதி 12இன் படி:

அரசு ஊழியர்கள் ஒன்றிய அல்லது அரசு ஊழியர்கள் ஒன்றிய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ் (Memes) போன்றவை) பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது. பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது. அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது.

எனவே இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மேற்கண்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *