தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில்  1,625 உடற்கல்வி பணியிடங்கள் உருவாக்கம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமனம்!

சென்னை, ஜூன் 11 தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள இந்த அரசாணை, கடந்த 2023-2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் தொகுப்பில் இருந்து சில பணியிடங்களைச் சரண் செய்து, அதற்கு ஈடாகப் புதிய உடற்கல்வி பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: சரண் செய்யப்பட்ட பணியிடங்கள்: 830 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் + 800 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள். உருவாக்கப்பட்டுள்ள புதிய பணியிடங்கள்: 1,625 (1,328 உடற்கல்வி ஆசிரியர்கள் + 297 உடற்கல்வி இயக்குநர்கள்).  புதிய பணியிடங்களை நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித் துறை எடுத்துள்ள முடிவுகள்:  உடற்கல்வி ஆசிரியர் (1,328 பணியிடங்கள்) நேரடி நியமனம் (ஆசிரியர் தேர்வு வாரியம்  மூலம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்). உடற்கல்வியில் 2 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு  அல்லது டிப்ளமா அல்லது ஹையர் கிரேடு பெற்றிருக்க வேண்டும். முன்பு நடைமுறையில் இருந்தது போல, பி.பி.எட்  மற்றும் பி.பி.எஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு இனி விண்ணப்பிக்க இயலாது. உடற்கல்வி இயக்குநர் – கிரேடு 2 (297 பணியிடங்கள்)  100 சதவீத பதவி உயர்வு  மூலம் மட்டுமே நிரப்பப்படும். மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர்  கிரேடு 1 பதவிக்கு எம்.பி.எட் (M.P.Ed) பட்டப்படிப்பு அவசியம்).

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *