பக்தர்கள் உயிர்ப் பலி தொடர்கிறது! ஆந்திராவில் சாலை ஓரம் தேநீர் குடித்த பக்தர்கள் நான்கு பேர் பலி!

1 Min Read
- Advertisement -

அமராவதி, அக்.24 ஆந்திராவில் சாலை ஓரம் தேநீர் குடித்த பக்தர்கள் நான்கு பேர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விவரம் வருமாறு:

ஆந்திர மாநிலம் விளியாநகரம் மாவட்டம் தேங்கடா கிராமத்தைச் சேர்ந்த சில பக்தர்கள் ஒரு பேருந்தில் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பவானி பக்தர்கள் என்பதால், பவானி மாலை அணிந்திருந்தனர்.  கடந்த 22.10.2026 அன்று அதிகாலை, ரவிகிமம்புடு மய்யம் என்ற இடத்தில் தேநீர் அருந்துவதற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. பக்தர்கள் பேருந்தை விட்டு இறங்கி, சாலையோரம் தேநீர் அருந்தினர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, அவர்கள் மீது மோதியது. அதில், 3 பக்தர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். இன்னொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 3 பக்தர்கள் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *