தரவுகள் திருட்டு! எஸ்பிஅய் வங்கி வாடிக்கையாளரா? அடுத்த 6 மாதங்களுக்கு கவனம்!

2 Min Read
- Advertisement -

மும்பை, அக்.22 ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ எனப்படும் எஸ்பிஅய் வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு தற்போது டார்க் வெப் தளத்தில் வெளியிடப்பட் டுள்ளது.

இதனால், பல லட்சம் எஸ்பிஅய் வாடிக்கையாளர்களின் விவரங்களை டார்க் வெப் மூலம் யார் வேண்டு மானாலும் பெற முடியும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இணை யத் தாக்குதல் நடந்திருப்பது உண்மைதான் என்று கூறியிருக்கும் எஸ்பிஅய், வங்கி சேவையில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

எனினும் சைபர் மோசடியாளர் களின் அடுத்த இலக்கு எஸ்பிஅய் வாடிக்கையாளர்களாக இருக்கலாம்.

தரவுகள் திருடப்பட்டதால் உடனடியாக வங்கிக் கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர் பணம் திருடப்பட்டுவிடும் என்பது அர்த்தமல்ல, பொதுவாக வங்கியின் தரவுகளைத் திருடு வோர், வங்கியிடமிருந்து ஒரு குறிப்பிட்டத் தொகையை கேட்டு மிரட்டுவார்கள். ஆனால், இங்கு தரவுகள் வெளிப்படையாக கசிய விடப்பட்டுவிட்டது. இது இன்னமும் அபாயத்துக்குரியது.

‘சிரியூசிம்’ என்ற அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, எஸ்பிஅய் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், கடன் விண்ணப்பங்கள், கணக்குத் தொடங்க வங்கியில் கொடுத்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ரகசியம் காக்கப்பட வேண்டிய தகவல்களையும் திருடி ‘டார்க் வெப்’ தளத்தில் வெளியிட்டுவிட்டது.

இவ்வாறு, ஒன்றல்ல, இரண்டல்ல, எஸ்பிஅய்-யின் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு பகிரப்பட்டுள்ளன.

தங்களது வாடிக்கையாளர் தரவுகள் அக்.16-ஆம் தேதி திருடப் பட்டு ‘டார்க் வெப்’பில் கசியவிடப் பட்டிருக்கும் தகவல், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரகால கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றிடமிருந்து வங்கி பெற்றிருப்பதாக எஸ்பிஅய் வங்கி கூறுகிறது.

எச்சரிக்கை

எஸ்பிஅய் வாடிக்கையாளர்களின் பெயர், வங்கிக் கணக்கு விவரம், கடன் விண்ணப்பம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்தும் வெளியே கசிந்துவிட்டது. குறைந்தபட்சம் இனி அடுத்த 6 மாதங்களுக்கு எஸ்பிஅய் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

‘‘வங்கியிலிருந்து அழைக்கிறோம்’’ என்று கூறி அனைத்துத் தகவல்களையும் மிகச் சரியாக சொன்னாலும் அவர்கள் வங்கியிலிருந்துதான் பேசு கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டாம்.

கடன் கேட்டு விண்ணப்பித் திருந்தால், அவர்கள் நிச்சயம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

செய்ய வேண்டியவை

எஸ்பிஅய் வங்கியின் பாஸ் வோர்டை மாற்றி, புதிய கடினமான கடவுச் சொல்லை அமைத்துக் கொள் ளலாம்.

எஸ்பிஅய் வங்கியிலிருந்து அழைக்கிறோம் என்று யார், என்ன சொன்னாலும் நம்பி ஓடிபி என எந்த தகவலையும் பகிர வேண்டாம்.அடுத்த ஒரு சில வாரங்களுக்கு அவ்வப்போது வங்கிக் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

வங்கியின் உண்மையான வாடிக் கையாளர் எண்ணைப் பதிவு செய்து கொள்ளுங்கள். வங்கிக் கணக்கில் ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *