சேத்தியாத்தோப்பு, அக.21 சிதம்பரம் கழக மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தந்தை பெரியார் பட ஊர்வலம், பெரியார் கொள்கைக் குடும்ப விழா, தெருமுனைக் கூட்டங்கள் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.
அதன் விவரம் வருமாறு:
பெரியார் பட ஊர்வலம்
18.10.2026 அன்று காலை 9.30 மணியளவில், சிதம்பரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் சேத்தி யாத்தோப்பு வாசவி திரையரங்கம் அருகில் தந்தை பெரியார் பட ஊர்வலம் தொடங்கியது.
மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமை வகிக்க, மாவட்ட, ஒன்றிய, பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழகக் கொடியை அசைத்துத் தொடங்கி வைத்தார்.

பட ஊர்வலத்தில்,
‘‘வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார், வாழ்கவே…..
அன்னை மணியம்மையார், வாழ்கவே…..
தமிழர் தலைவர் ஆசிரியர், வாழ்கவே……
சுதந்திரமா? சுதந்திரம்
என்னங்கடா? சுதந்திரம்,
ஜாதி இருக்கும் நாட்டிலே எப்படி வந்தது சுதந்திரம்?’’
என்ற முழக்கங்களுடன் பேரணி வாசவி திரையரங்கம் அருகே தொடங்கி, ராஜீவ்காந்தி சிலை ரவுண்டானா வழியாக பேருந்து நிலையத்தைச் சுற்றி, குடும்ப விழா நடைபெறும் வேலன் திருமண நிலையத்தில் முடிந்தது. பேரணியையும், பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்களையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற பேரணி, பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
குடும்ப விழா
10.45 மணிக்கு இரண்டாவது நிகழ்வாக பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை குடும்ப விருந்து விழா சிறப்பாக நடைப்பெற்றது.
பெரியாரால் பயனடைந்தோம்!
மாவட்ட மகளிரணித் தலைவர் சுமதி பெரியார்தாசன், உரையாற்றுகையில், ‘‘நான் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டேன். தற்போது நல்ல முறையில் வாழ்கின்றோம். ஆசிரியர் பணியில் உள்ளேன், பெரியார் கொள்கை வழி சிறப்பான வழி’’ என்று பேசினார்.
தொடர்ந்து புஷ்பா, தமிழரசி, கவிதா ஆறுமுகம் ஆகியோர் தங்கள் வாழ்க்கையின் எதார்த்த சூழ்நிலை யைப் பகிர்ந்துக் கொண்டனர்.

தொடர்ந்து புதிதாக திராவிடர் கழகத்தில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளராகக் களப்பணி செய்து வரும் நா.சத்தியப்பிரியன், உரையாற்றும்போது, நான் “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தைப் படிக்கும் போது, தந்தை பெரியாரைப்பற்றி இன்னும் ஏராளமாக தெரிந்துகொள்ள விரும்பிய நேரத்தில், ‘‘இனி வரும் உலகம்’’ புத்தகம் கிடைத்தது. படித்தேன், பிறகு குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன், திராவிடர் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டேன், என் நண்பர்களையும் அழைத்து வந்துள்ளேன், நன்றி என்றார்.
தொடர்ந்து அஸ்வின், மணிஷா, தீனா, திபணி, ஜெய்ஹிந்த், குகன், வேல்முருகன், சேதுபதி, ஜெயசிறீ, வாசன், ஜெய்கணேஷ், கலைச்செல்வன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர். அனைவருமே பெரியார் பயிற்சிப் பட்டறையில், பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.அறிவன்- தன்யா, திருக்குறள் ஒப்புவித்து, ஆடல் மற்றும் பாடல்கள் பாடினர்.
சிறப்பு விருந்தினர்களுக்குப் பாராட்டு – சிறப்பு!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக பொறியாளர் அணி மாநிலத் தலைவருமான துரை.கி.சரவணன், சேத்தியாதோப்பு திமுக நகர செயலாளர் வழக்குரைஞர் பழனி. மனோகரன், பேராசிரியர் முது முனைவர் அரங்க.பாரி ஆகியோருக்கு மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா. ஜெயக்குமார் சிறப்புச செய்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தே.நர்மதா ஆகியோருக்கு மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் சிறப்பு செய்தார்.
நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்பு செய்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன் உரையாற்றுகையில், ‘‘பெரியார் கொள்கையை தமிழர் தலைவர் ஆசிரியர் இன்றும் எழுச்சியுடன் வழிநடத்தி வருகிறார். ஏராளமான இளைஞர்களை அரங்கத்தில் பார்க்க முடிகிறது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முதுமுனைவர் அரங்க.பாரி உரையாற்றுகையில், ‘‘எங்கள் குடும்பம் தமிழ் உணர்வு கொண்ட குடும்பம். தமிழிலேயே பெயர் வைத்து அழகு பார்க்கும் குடும்பம். தமிழ் உணர்வை நான் பெற்றது தந்தை பெரியாருடைய தொண்டின்பால். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிகின்றேன் என்றால், கல்வியின் தாகத்தைத் தீர்த்த மண், சிதம்பரத்தில் உள்ள இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மண் என்றார்.
சேத்தியாதோப்பு திமுக நகரச் செயலாளர் வழக்கு ரைஞர் பழனி உள்ளிட்டத் தோழர்கள் பேசினார்.

சிறப்புரை
மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தே.நர்மதா உரையாற்றுகையில், ‘‘அரங்கத்தில் மூன்று வரிசைகள் தொடர்ச்சியாக மகளிர்கள் அமர்ந்துள்ளனர். வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்களை முன் வரிசைக்கு கொண்டு வருவதற்கு ஓர் இயக்கம் தேவைப்பட்டது; ஒரு தலைவர் தேவைப்பட்டார் என்றால், அவர்தான் தந்தை பெரியார், அந்த இயக்கம் தான் திராவிடர் கழகம்.
அதே பெண்கள் பேனா பிடிப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகின. இன்று மேடை ஏறுகிறோம். பேசுகிறோம் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார்… பெரியார்… பெரியார்……
93 வயதிலும் நம் குடும்பத் தலைவர் ஆசிரியர் சுற்றிச் சுழல்கிறார். சோர்வு இல்லாமல் உழைக்கிறார், எழுதுகிறார், பேசுகிறார், பெரியாரை பார்க்காத இந்தத் தலைமுறையின் ஒட்டுமொத்த பெரியாராகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பார்க்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
வயது பாராமல் விளையாட்டு!
குடும்ப விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கி மகிழ்விக்கப்பட்டது. காலையில் தேநீர், பிஸ்கட், மாலையில் தேநீர் வழங்கப்பட்டது.
மதிய உணவிற்குப் பிறகு பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந் தொண்டர்கள் வரை வயது பாராமல் விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பலூன் ஊதி உடைத்தல், இசை நாற்காலி, ஊசி நூல் கோர்த்தல் (நடை) – மூன்று போட்டிகளிலும் பெரியார் பிஞ்சுகள், மகளிர், மாணவர்- இளைஞர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு விளையாடினர். கலந்துகொண்ட அனைவருக்கும் கல்வி உபகரணங்கள் மற்றும் பெரியார் புத்தகங்கள் பரிசாக வழங்கிப் பாராட்டப்பட்டது.
பெரியார் என்பது ஒரு வாழ்வியல்!
குடும்ப விழா நிகழ்வினைத் தொடங்கி வைத்து நிகழ்வுக் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் உரையாற்றுகையில் ‘‘பெரியார் கொள்கையை பின்பற்றி வந்தால் வெற்றி உறுதி. குழந்தை பிறந்த 16 ஆம் நாள் முதல் முதலாம் ஆண்டு பிறந்தநாள். திருமணம், பண்டிகைகள், தேர், திருவிழாக்கள், மொட்டை அடித்தல், எட்டுக்குடி முருகனுக்கு காவடி எடுத்தல், மேல்மருவத்தூர், பழனி, பாதயாத்திரை, அமாவாசை, இறப்பு, பால் தெளி, 8 ஆம் நாள், கருமாதி பிறகு 30 ஆம் நாள் ஓராண்டு கழித்து திவசம், திதி, இப்படி என்று அனைத்திற்கும் செலவு செய்வார்கள். மாறாக பெரியார் கொள்கையைக் கடைப்பிடிப்பதினால் இவை அனைத்தும் மிச்சம் – சேமிப்பு ஆக பெரியார் கொள்கையைப் பின்பற்றி கொள்கை வழி நடந்தால் வெற்றி உறுதி, சுயமரியா தையுடன் வாழலாம்’’ என குறிப்பிட்டார்.
பொதுக்குழு உறுப்பினர் பா.இராஜசேகரன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் தலைவர் பூ.சி. இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
மாவட்டச் செயலாளர் கோவி. பெரியார் தாசன், மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சத்தியப்பிரியன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.நெடுமாறன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கோ.சுமதி-பெரியார்தாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மாவட்ட தொழில் நுட்ப அணி அமைப்பாளர் க. கதிரவன், கீரை ஒன்றிய தலைவர் பூவை.அசோக், கீரை ஒன்றிய செயலாளர் அள்ளூர் ஜெயபால், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் து. ஜெயபால், திருமுட்டம் ஒன்றிய தலைவர் க.பெரி யண்ணசாமி, திருமுட்டம் ஒன்றிய செயலாளர் இரா.இராஜேந்திரன், புவனை ஒன்றிய தலைவர் என்.ஏ. இராமலிங்கம், பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் கு. தென்னவன், காட்டுமன்னை ஒன்றிய அமைப்பாளர் சி. சண்முகசுந்தரம், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா. செல்வரத்தினம், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் தெ.ஆறுமுகம் மழவை நெல்.இரா.செல்வம், பகுத்தறிவாளர் கழகம் திருமுட்டம் இரா.பெரியார் தொண்டன், பாளையங்கோட்டை பெரியவர் சூசை, காட்டுமன்னை நகரத் தலைவர் பொன்.பஞ்சநாதன், வலசக்காடு அர.வீரமணி, பாளையங்கோட்டை பெ. அசோக்.சக்கரவர்த்தி, பகுத்தறிவாளர் கழகம். மா.பன்னீர்செல்வம், வீரானந்தபுரம் சுந்தரமூர்த்தி, சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் டி.தீனா. மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ப. அஸ்வின், இளைஞரணி பி. அஜய். பூதவராயன்பேட்டை தலைவர் சேகர் ஆதனூர் குகன், இளைஞரணி ஜெ.அபிஷேக், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இரா.வாசன், தமிழரசி-வாசன், ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் நிகழ்வு:
தெருமுனைக் கூட்டம்!
மாலை 6 மணிக்கு சேத்தியாத் தோப்பு ராஜீவ் காந்தி சிலை எதிரே, பெரியார் பட ஊர்வலம் வாகனத்திலே ஒலிபெருக்கி அமைத்துத் தெருமுனைக் கூட்டம் தொடங்கியது.
மாவட்டத் தலைவர் பூ.சி. இளங்கோவன் தலைமை வகித்தார். தொடக்கத்தில் மாவட்ட மாணவர் கழக செயலாளர் நா. சத்தியபிரியன். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் உரையாற்றி னர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர். தே.நர்மதா சிறப்புரையாற்றினர்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம். பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. கூட்டம் தொடங்கும் போது குறைவான பொதுமக்கள் இருந்த நிலையில் அடுத்தடுத்து தோழர்கள் பேசப் பேச, குறிப்பாக நர்மதா பேசும்போது அதிக கூட்டம் கூடினர். காவல்துறையினரும் மிகுந்த ஒத்துழைப்பைக் காட்டினர்.
நிறைவாக மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி சிலம்பரசன், நன்றி கூறினார்.
தொகுப்பு: நாகை நாத்திக.பொன்முடி
