அரியலூரில் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘பெரியார் நடை’

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அரியலூர், செப். 29- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் நடை (PERIYAR WALK) என்னும் பெரியார் நடைப்பயணம் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகில் 20.9.2026 அன்று காலை 6:30 மணிக்கு தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கழக தலைவர் விடுதலைநீலமேகன் தலைமையேற்க, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில பொருளாளரும் அரியலூர் மாவட்ட தலைவருமாகிய ஜெயராமன்  தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச் செயலாளர் இராஜேந்திரன், கழக மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் நடையை கோல் டன் மருத்துவமனை யின் தலைமை மருத்துவர் டாக்டர் கண்மணி நடை பயணத்தினுடைய அவசியத்தையும் பயன்பாடுகள் குறித்தும்எடுத்துக்கூறி நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் தொடக்க உரையாற்ற, நடைப் பயணத்தை மாநில ப.க. அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி ஒருங்கிணைத்தார். நடைப்பயணம் மார்க்கெட் தெரு,, பெரம்பலூர் சாலை, பொன்னுசாமி அரண்மனை தெரு வழியாக பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு நிறைவடைந்தது. துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

நடை பயணத்தை வாழ்த்தி பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் திருமழபாடி அல்லி  வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக  மாவட்டப.க தலைவர் நடராஜன் நடைப் பயணத்தை நிறைவு செய்து வைத்தார்.

கழக பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா, புழல் சா.ராசேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ.தமிழ ரசன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஆ.இளவழகன், ஒன்றிய நிர்வாகிகள் சி.சிவக்கொழுந்து, மு.முத்தமிழ்செல்வன், ராசா செல்வக்குமார், த.செந்தில், ஆட்டோ தர்மா,பெ கோபிநாதன், கலைமணி, கீழப்பழுவூர்கே.எம்.அன்பரசன், கா. பெரியார் செல்வன்,துரை. காமராஜ், ப.க.நிர்வாகிகள் சிவசக்தி, ரவி, மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்களும் நடைப் பயண நண்பர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *