ஒற்றைப்பத்தி

2 Min Read
- Advertisement -

‘ஜாதிப் புத்தி!’

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தில் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு கொடூர நிகழ்வு நடைபெற்றது (30.9.2026).

174 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் அதில் இருந்தனர்.

விமானத்தின் முதன்மை விமானியாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் என்பவரும், துணை விமானியாக ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹமாமி என்பவரும் பணியில் இருந்தனர்.

திடீரென துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்த கோடாரியை எடுத்து, விமானி ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.

மேலும், விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அதை விபத்துக்குள்ளாக்க முயன்று, கீழே செங்குத்தாகக் கொண்டு சென்று, விபத்தை ஏற்படுத்தி, பயணிகள் அனைவரையும் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிகிறது.

விமானத்தில் ஓய்வில் இருந்த மற்ற விமானப் பணியாளர்களும் உடனடியாக காக்பிட் அறைக்குள் நுழைந்து, ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்திருந்த நிலையிலும், இந்திய விமானி ஸ்மித் மச்சார், மற்றவர்களின் உதவியுடன் தாக்குதல் நடத்திய கொடூரனை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர்.

விமானத்தில் பயணித்த பல் மருத்துவர், பலத்த காயமடைந்திருந்த விமானிக்கு முதல் உதவி செய்து, அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தி, விமானியின் உயிரைக் காப்பாற்றினார்.

இந்த நிலையிலும், விமானியும், சக பணியாளர்களின் உதவியுடன் விமானத்தைப் பத்திரமாக, அரேபியாவின் தபூக் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்கினார்.

தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல், 174 பயணிகளையும் விமானப் பணி உதவியாளர்களையும் காப்பாற்றிய அந்த விமானியை உலகமே பாராட்டி மகிழ்ந்தது.

அவரது கடமை உணர்வையும் உலகம் என்றென்றும் நினைவு கூரும் என்பதில் அய்யமில்லை.

உண்மை இவ்வாறு இருக்க, சமூக வலைதளங்களில் அந்த விமானி எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் இறங்கியது எத்தனை வெட்கக்கேடு – தலைக்குனிவு?

‘‘குஜராத் மாநிலம் நாகர் ‘பிராமண’க் குடும்பத்தைச் சேர்ந்தவர்’’ என்று இணையத்தில் ஓகோ என்று உலவ விட்டனர்!

ஒரு வீர தீர செயலில் ஈடுபட்டு, 174 பயணிகளைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுபவரைக்கூட ஜாதி, மதப் பார்வையில் பார்ப்பதுதான் பார்ப்பன ஜாதிப் புத்தி என்பதை மறவாதீர்!

 – மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *