கன்னியாகுமரி மாவட்டக் கழக சார்பாக இராமபுரம் ஊராட்சி லட்சுமிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்த நாள் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் அந்தப் பகுதியில் தந்தை பெரியார் சிலை முன்பாக நடைபெற்றது. பொது மக்களுக்கு பகுத்தறிவு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு பகுத்தறிவு துண்டறிக்கைகள், பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு துண்டறிக்கைகளை ஆர்வமுடன் கருத்தூன்றி படித்தனர்.
