சதுரங்கப் போட்டியில் மாணவி சாதனை!

- Advertisement -

திருச்சி, அக்.17- ராயல் செஸ் அகாடமி (Royal Chess Academy) மற்றும் திருச்சி மாவட்ட சதுரங்கக் சங்கம் இணைந்து நடத்திய 3-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி,  கடந்த அக்டோபர் 2, 2026 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில்  12 வயதுக்குட்பட்டோர் (Under-12 Open/Girls) பிரிவில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஜானவி போஷிகா  மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்.

மொத்தம் 5 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 3.5 புள்ளிகளைக் குவித்து, போட்டியில், மேற்கண்ட மாணவி, நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவ-மாணவிகள் தங்களது  வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *