திருச்சி, அக்.17- ராயல் செஸ் அகாடமி (Royal Chess Academy) மற்றும் திருச்சி மாவட்ட சதுரங்கக் சங்கம் இணைந்து நடத்திய 3-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி, கடந்த அக்டோபர் 2, 2026 அன்று நடைபெற்றது.
இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் (Under-12 Open/Girls) பிரிவில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஜானவி போஷிகா மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்.
மொத்தம் 5 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 3.5 புள்ளிகளைக் குவித்து, போட்டியில், மேற்கண்ட மாணவி, நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவ-மாணவிகள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
