டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இளைஞர் அமைப்புகள் பேரணி – காவல்துறையுடன் மோதல்; இளைஞர் காங்கிரஸ், DYFI, SFI பேரணிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர். மாற்று இடம் வழங்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தை அணுக இளைஞர் காங்கிரஸ் முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தில் ஜாதி, கல்வி, தொழில், பொருளாதாரம் உள்ளிட்ட 40 கேள்விகள் இடம்பெறும்; குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படும். ஜாதிவாரிக் கணக்கெடுப்புடன் சமூக–பொருளாதார நிலையும். கல்வித் தகுதி, தொழில், வங்கிக் கணக்குகள், கோவிட் தடுப்பூசி, இடப் பெயர்வுக்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும்.
* கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மும்முனை கொடி பேரணி: காவல்துறையின் கைதினைக் கண்டித்து, ஜந்தர் மந்தரில் இருந்து கன்னாட் பிளேஸ் வரை தேசியக் கொடியுடன் பேரணி நடத்த சி.ஜே.பி. திட்டம்; ஜனநாயக உரிமைகளையும் எதிர்ப்புக் குரலையும் ஒடுக்குவதாக மோடி அரசு மீது விமர்சனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* புதிய ஒடிசா ஆளுநர்: பாஜகவுக்கு அதிக வாக்குகள் பெற்று தருவேன்!: பாஜக முன்னாள் எம்.பி.யும் தலித் தலைவருமான ராம், பாஜகவின் எஸ்சி அணியை வலுப்படுத்தி அதிக வாக்குகளைப் பெற்று தருவேன் எனக் கூறியதால், அவரது நடுநிலைமை குறித்து பிஜு ஜனதா தளமும் காங்கிரசும் கேள்வி எழுப்பியுள்ளன. (உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி)
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “நீதிபதிகளுக்கு இந்திய குற்றவியல் (IPC) சட்டப் பிரிவுகள் தெரியவில்லை!” – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்: கொலைக் குற்றத்தை தண்டனைக் குறைவான குற்றமாக மாற்றிய வழக்கில், அய்.பி.சி. பிரிவுகள் 304(பகுதி I), 304(பகுதி II) ஆகியவற்றின் வேறுபாடு கூட நீதிபதிகளுக்கு தெரியவில்லை என உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
தி இந்து:
* ஜந்தர் மந்தர் போராட்டம் தடை, எதிர்ப்புக் குரல்களை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கிறது – உச்சநீதிமன்றத்தில் மனு: ஜந்தர் மந்தரைப் போராட்டக்களமாக அறிவித்த நிலையை நீக்கியதற்கு எதிரான மனுவை அக்டோபர் 26 அன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க முடிவு. போராட்டங்களை மக்களிடமிருந்து தொலைவில் நடத்துவது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* மோடி அரசால் புறம் தள்ளப்பட்ட முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு: மோடி அரசை காங்கிரஸ் சாடல். விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணிக்கும் மோடி அரசை தன்கர் கடுமையாக விமர்சித்தவர் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்; அவருக்குச் சட்டப்படி உரிய அரசு இல்லம் கூட இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றும் சாடினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “ஏற்க முடியாத சாக்குப்போக்குகள் வேண்டாம்!” – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. 2023 வழக்கின் ஆவணங்களை காணவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது; அடுத்த விசாரணையின்போது ஆவணங்களைச் சமர்ப்பிக்காவிட்டால், ஆணையத்திற்கு எதிரான முடிவுக்கு வர வேண்டியிருக்கும் என எச்சரிக்கை.
– குடந்தை கருணா
