அரவிந்த் போலீஸ் அகாடமி உலக சாதனை ஓவியப் போட்டியில் பெரியார் நூற்றாண்டு நினைவு பள்ளி மாணவர்கள் அளப்பரிய சாதனை!

- Advertisement -

திருச்சி, அக்.15- திருச்சி,  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அரவிந்த் போலீஸ் அகாடமி நடத்திய உலக சாதனை ஓவியப் போட்டியில் பேராா்வத்துடன் பங்கேற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில்  மாணவர்கள் எம். வருண் வைரம், எம்.சிவசிறீ வைரம் மற்றும் டி. அரிஷ்ஃபா அன்சாரி டி.ரிஃபா அன்சாரி ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப் போட்டியின் முடிவில், எஸ்.அரிஷ்ஃபா அன்சாரி தனது திறமையான ஓவியத் திறனால் முதலிடத்தைக் கைப்பற்றி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும், டி. ரிஃபா அன்சாரி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மாணவர்களின் இந்தக் கலைத் திறமையும், உலக சாதனைப் போட்டியில் அவர்கள் பெற்ற வெற்றியும் பள்ளிக்கு நற்பெயரையும் பெருமையையும் தேடித் தந்துள்ளதுடன், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் மேற்கண்ட மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்/

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *