திருப்பத்தூர், அக். 15- தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா மகிழ்வாக சுயமரியாதை குடும்ப விழா மிக எழுச்சியுடன் திருப்பத்தூர் நகர ரோட்டரி அரங்கில் 11.10.2026 அன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் பெ.கலைவாணன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியை சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் நான்காம் தலைமுறை கொள்கை வாரிசு சி.இன்பா (வயது 4) தொண்டுசெய்த பழுத்தப்பழம் பாடலைப் பாடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகளுக்கும், மாணவர்களுக்கும் தங்கள் திறனை வெளிப்படுத்தப்படும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாணவச் செல்வங்களும், பெரியார் பிஞ்சுகளும் மிக உற்சாகமாக பங்கேற்றனர். இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மட்டு மல்லாது அனைவருக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.
அதன்பிறகு தந்தை பெரியார் அவர் களோடு பயணித்து, அவரோடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற 85 வயதை கடந்த பெரியார் பெருந்தொண்டர்கள். எம்.ஞானப்பிரகாசம், வ.புரட்சி, கருப்புச்சட்டை மா.சி.பாலன், இரா.நரசிம்மன், பெருமாள்சாமி ஆகியோருக்கு இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மேனாள் அமைச்சர், சோலையார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி பயனாடை அணிவித்து பெரியார் விரும்பி அணியும் லுங்கிகளைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்.
தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் மகிழ்வோடு சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு அவர்களின் வாழ்வி ணையர் கே.கே.சி.கமலம்மாள் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் கொண்டப்பட்டது.
கமலம்மாள் அவர்களைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக கழக வெளியீடாக கொள்கை வீராங்கனைகள் என்ற புத்தகங்கத்தில் வெளிவந்த இவர் பேட்டியில் தந்தைபெரியார், மணியம்மையாரோடு இணைந்து இவரின் போராட்ட வாழ்க் கைப் பற்றி வெளிவந்த தகவல்களை மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற கே.கே.சி.கம லம்மாள் அவர்களின் மகனும் மேனாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, இந்தக் குடும்ப விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தக் குடும்ப விழாவில் நானும் பங்கேற்றது மகிழ்ச்சி என்றும், தனது தாயார் அவர்களின் நினைவுகளையும், கழகத்தில் தனது தந்தையோடு அவர் ஆற்றிய பணிகளையும் விளக்கிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தூயநெஞ்சக் கல்லூரி முதல்வர் பாதர் பிரவின் பீட்டர், விஜயா கேலக்ஸி உரிமையாளர் எம். மதி, மருத்துவர் லீலா சுப்பிரமணியன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் ஜாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியாரின் கொள்கை உணர்வாளர்களாக வருகை தந்து தந்தை பெரியாரைப் பற்றியும், பெரியார் பெருந்தொண்டர்கள் பற்றியும் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் மிகச் சிறப்பு வாய்ந்த சுயமரியாதைக் கொள்கை விழாவிற்கு வருகை புரிந்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து அடுத்து ஆண்டு முதல் ஆசிரியர் வழிகாட்டுதலில் மேலும் இவ்விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார்.
இந்நிகழ்வில் கொள்கை உறவுகளாக எ.அகிலா (மாநிலப் பொருளாளர் மகளிரணி) மா.சி.பாலன் (மாவட்டக் காப்பாளர்) சி. தமிழ்ச்செல்வன் (மாவட்டத் துணைத்தலைவர்) காளிதாஸ் (நகரத் தலைவர்) எம். ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) வ. புரட்சி (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்)
எம. என்.அன்பழகன் எம். (விடுததை வாசகர் வட்ட அமைப்பாளர்) வே. அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) அன்புச்சேரன் (வாணியம்பாடி நகரத் தலைவர்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி) தாமரை (நகரக் காப்பாளர் மகளிரணி) நா. சுப்புலட்சுமி சி.சபரிதா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)
பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) இராஜேந்திரன் (சோலை யார் பேட்டை அமைப்பாளர்), மோ.நித்தி யானந்தம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) மோ. வசீகரன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) கே. மோகன் (மாவட்டக் கழகத் தலைவர் பெ.கட்டுமான தொழிலாளரணி) அக்ரி அரவிந்த் (நகர இளைஞரணிச் செயலாளர்) மு.வெற்றி (மாதனூர் ஒன்றியத் தலைவர்) வெங்கடேசன் (மாதனூர் ஒன்றியச் செயலாளர்) சரவணன் (இலக்கி நாயக்கன்பட்டி கிளைத்தலைவர்) லட்சுமணன் (லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்) பிரபாகரன், யூதாஸ் (கற்பிபயிலகம்) அன்பு (நகர மாணவர் கழகச் செயலாளர்) மாணவர் கழகத்தைச் சேர்ந்த தோழர் தர்சினி, கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)

தி. நவநீதம் (மாவட்ட மகளிரணி அமைப் பாளர்) க. முருகன் (நகர இளைஞரணி அமைப்பாளர்) இசைபிரியன் (மாணவர் கழகம்), லாவண்யா, தர்சினி (மகளிரணி பொறுப்பாளர்கள்), க.இனியவன், க.உதயவன் (மாணவரனி) மற்றும் திருப்பத்தூர் ரோட்டரி உறுப்பினர்கள் கொள்கை உறவுகளாக குடும்பம், குடும்பமாக சுமார் 200 பேருக்கு மேல் பங்கேற்றனர்.
அனைவருக்கும் மதியம் புலால் உணவு வழங்கப்பட்டது.

பொம்மிடி (பி.மல்லாபுரம்) நகர திமுக செயலாளரும், பகுத்தறிவாளருமான கு.கவுதமன் அவர்கள் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை வாங்கி தோழர்களுக்கு அளித்தார்.
