தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டுவதை விட்டு விட்டு மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் த.வெ.க.வுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்டனம்

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 15- ‘‘தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டு வதை விட்டு விட்டு மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்று த.வெ.க.வுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்:   தமிழ்நாட்டில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை எதிர் கொள்ள, தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத் திற்கு ரூ.35 கொடுத்து, 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவதாக அறிவித்துள்ளது. இத னால், தமிழ்நாடு அரசு சுமந்து வரும் ரூ.13 லட்சம் கோடி கடன் சுமையில் மேலும் ரூ.1 லட்சம் கோடி அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாரம் குறை வான விலையில் வாங்க வாய்ப்பிருக் கும் நிலையில், அதனை தவிர்த்து விட்டு, வெளிச்சந்தைக்கு செல்வது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்பட்டு, குறைந்த விலையில் வெளிப்படையான முறையில் மின்சாரத்தை வாங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.35 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்யவிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் இவ்வளவு அதிக விலைக்கு எந்த மாநிலமும், எந்த காலத் திலும் கொள்முதல் செய்ததில்லை. தற்போது பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மை.

ஆனால், பல வாரங்களாகவே மின்வெட்டு இருப்பதை பொது மக்கள், அரசியல் கட்சிகள், பல இயக்கங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இவற்றை யெல்லாம் மறுத்தே வந்திருக்கிறது. மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணக்கிட்டு உரிய காலத்தில் தேவை யான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், மின்வெட்டை காரணம் காட்டி கொள்ளை விலைக்கு கொள்முதல் செய்வது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும். ரூ.35க்கு கொள்முதல் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக் குறையை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை தாராளமாக அள்ளிக் கொடுப்பதுமாகும். ஏற்கனவே, மின் வெட்டு, மின் கட்டண உயர்வு என்று கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றுவதற்கு வழி வகுப்பதாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *