மாணவர்களோடு மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மோடியின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது

2 Min Read
- Advertisement -

சென்னை, அக்.15 வட இந்தியாவில் புதிய மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி, விடுமுறை நாட்களாக இருந்தாலும் பள்ளி மாணவர்களைச் சீருடையில் வலுக் கட்டாயமாக வரவழைத்து அவர் களோடு பயணித்து விளம்பரம் தேடிக் கொள்வார்;

ஆனால், தமிழ்நாட்டில் அந்த உத்தி பலிக்காது என்பதால் அரசியல் காரணங்களுக்காகத் திறப்பு விழாவின் போது மாணவர்கள் தவிர்க்கப்பட்டு, பின்னரே அழைத் துச் செல்லப் பட்டதாகக் சமூக வலை தளங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் கிண்டல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பூவிருந்தவல்லி மக்களின் நீண்ட நாள் கனவான பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணித்து வரும் நிலையில், சமீபத்தில் சிறப்புப் பள்ளி மாணவ-மாணவிகள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பூயை அடுத்த கரையான்சாவடி பகுதியில் இயங்கி வரும் ‘தொன் குவனெல்லா’ அறிவுத்திறன் குறை பாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

“காண்போம் கற்போம்” என்ற நடைமுறை கற்றல் முறையின் கீழ் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டதாக தெரிவித்தனர்.

மாணவர்களின் இந்த மகிழ்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சில கேள்விகளையும் கிண்டல்களையும் முன்வைத்து வருகின்றனர்:

வட மாநிலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளாக இருந்தாலும் கூட, பள்ளிச் சிறுவர்களைச் சீருடையில் வரவழைத்து பிரதமர் மோடி அவர் களுடன் மெட்ரோவில் பயணம் செய்து ஒளிப்படங்கள் மற்றும் காணொலி காட்சிப் பதிவுகள் மூலம் விளம்பரம் தேடுவது வழக்கமான ஒன்று.

தமிழ்நாட்டில் தயக்கம் ஏன்?

ஆனால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வேறுபட்டது இங்கு கேள்விகள் அதிகம் எழும் திறப்பு விழாவின் போது ஞாயிறு அன்று சென்னையில் மாணவர் களைப் பயன்படுத்தினால் அது பெரும் அரசியல் விவாதத்தையும் எதிர் வினையையும் உருவாக்கும் என்பதால், அன்றைய நாள் மாணவர்களைத் தவிர்த்துவிட்டு, திறப்பு விழா முடிந்து சில நாட்கள் கழித்து தற்போது இந்த மாணவர் பயணத்தை நடத்தியுள்ளனர்.

பிரதமரின் வழக்கமான விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதே இதற்கு முதன்மை காரணம் எனச் சுட்டிக்காட்டி பலரும் இச்செயல் பாட்டைக் விமர்சித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *