உடன்குடியில் 3,200 மெகாவாட் திறனில் புதிய விரிவாக்க மின் நிலையங்கள்!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 15- உடன் குடியில் 3,200 மெகாவாட் திறனில் புதிய விரிவாக்க மின் நிலையங்கள் அமைப் பதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு உடன்குடியில் 660 மெகாவாட் திறனில், இரு அலகுகள் (1,320 மெகாவாட்) கொண்ட அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் அலகில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. 2ஆவது அலகில் இந்தாண்டு இறுதிக்குள் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த மின் நிலையத்தின் அருகில் 660 மெகா வாட் திறனில் இரு அலகுகள் கொண்ட ‘உடன்குடி–2’ மற்றும் ‘உடன்குடி–3’ ஆகிய மின் நிலையங்களை அமைக்க திட்ட மிடப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டத் தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

அதன்படி, தலா 660 மெகாவாட் அலகுகளுக்குப் பதிலாக, தலா 800 மெகாவாட் திறனில் நான்கு அலகுகள் என, மொத்தம் 3,200 மெகாவாட் திறனில் புதிய விரிவாக்க மின் நிலையங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் நடந்த மின்வாரிய இயக் குநர்கள் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய மின் திட் டங்கள் அனைத்தும் பொது – தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட உள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட ஆலோசகராக, தமிழ்நாடு உள்கட்ட மைப்பு மேம்பாட்டு வாரியம் நியமிக்க உள்ளது. இந் நிறுவனம் திட்டத் திற்கான சாத்தியக்கூறு ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் ‘டெண்டர்’ ஆவ ணங்களை உரு வாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்குடி மின் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே, இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கடல்சார் உள்கட்டமைப்பு தான். கடற்கரையில் இருந்து 7 முதல் 8 கி.மீ தூரத்திற்கு கடலுக்குள் தனியாக அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறங்குதளம் மூலமாக கப்பல்களில் இருந்து நிலக்கரி நேரடியாக இறக்கப்படும். அங்கிருந்து மணிக்கு 2,000 டன் நிலக்கரியைக் கொண்டு சேர்க்கும் அதிநவீன கன்வேயர் பெல்ட் வழியாக மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த பிரத்யேக துறைமுக வசதி கொண்ட தமிழ்நாட்டின் முதல் மின் திட்டம் உடன்குடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *