தனியார் கல்வி நிறுவனங்கள் ஜாதி விவரம் கேட்கக் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read
- Advertisement -

மதுரை, அக்.13- தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஜாதி விவரங்களைக் கேட்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகரைச் சேர்ந்த விக்ரமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஜாதி விவரங்களைக் கேட்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பின்போது ஜாதி தகவல்களைத் கேட்பதால் சேர்க்கை, வேலைவாய்ப்புத் தேர்வின்போது பாகுபாட்டுக்கு வழிவகை செய்யும்.

ஒருவரின் ஜாதி விவரங்களைக் கேட்பது சட்டவிரோதம். எனவே, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஜாதி விவரங்களைக் கேட்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்தி வேல் அமர்வு விசாரித்து, ‘தமிழ்நாட்டில் எந்தவொரு தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஜாதி விவரங்களை கேட்பதைக் கட்டாய மாக்கக் கூடாது’ என உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *