கொல்கத்தா, அக்.12 மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தா மாநகராட்சி சார்பில் வருகிற 21 ஆம் தேதி வரை சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வங்காள மொழியுடன், ஹிந்தி யிலும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
இதன் மூலம் மாநில பாரதீய ஜனதா அரசு ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் அணி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில், ‘நமது அழகான மொழி சிதைக்கப்படுவதற்கு பாரதீய ஜனதா அரசு அனுமதி அளிக்கிறது. டில்லியில் உள்ள உங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக, வங்கா ளத்தின் மீது ஹிந்தியைத் திணிப்பதை நிறுத்துங்கள். இப்போதே நிறுத்துங்கள்’ என குறிப்பிட்டுள்ளது. இதைப்போல அந்த அணியின் பொதுச்செயலாளர் அபிஷேக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
