திருச்சி, அக்.12- 11ஆம் வகுப்பு டி.யோகதர்ஷினி வருவாய் மாவட்ட அளவிலான தடளப் போட்டியில் 100 மீ, 200மீ மற்றும் 100 மீ தடைத்தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவில் நடைபெறவுள்ள தடகளப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 41ஆவது தேசிய அளவிலான சென்னையில் நடைபெறவுள்ள தடளப்போட்டியில் 100 மீ, 200 மீ மற்றும் “மெட்லி ரிலே” (Medly Relay) போட்டியில் பங்கு பெறவுள்ளார். அம்மாணவியின் தாயாரை மரியாதை செய்யும் வகையில் பள்ளிக் காலை வணக் கக் கூட்டத்தில் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார்.

8ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவி வி.சவுமியா, மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஆறாம் இடமும், மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 9ஆம் இடமும் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
