தனிநபர் சொத்துத் தகராறில் அமலாக்கத் துறை கடும் சட்டங்களை பயன்படுத்தக்கூடாது சென்னை உயர் நீதிமன்றம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.11  ‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொரு ளாதாரத்துக்கு குந்தகம் விளை வித்தல், ஊழல், பொது மக்களின் பணத்தை மோசடி செய்வது, பொது நலனுக்கு எதிராக நடந்து கொள்வது உள்ளிட்ட குற்றங்களில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கை எடுக்க லாம். அதைவிடுத்து தனி நபர்களுக்கு இடையேயான சொத்து விவகாரங்களில் தனது கடுமையான சட்டங்களை பிர யோகிக்க வேண்டாம்’ என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பண பரிவத் தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த அழ அழகப் பன் என்பவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

மனுதாரின் தந்தை தமக்கு அளிக்கப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி உரிமையை தவறாக பயன்படுத்தி, தனது சொத்துகள் மற்றும் பணத்தை மோசடி செய்ததாகவும், அதற்கு மனுதாரர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாகவும் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப் படையில் கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை மனுதாரர், அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத் துறை, பணமோசடி தடுப்பு சட்டம் 2002-இன் படி பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.

இந்த ஜாமீன் வழக்கை நீதிபதி என்.ரமேஷ் விசாரணை செய்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் டி.மோகன் மற்றும் வழக்குரைஞர் ஜி.உமா மகேசுவரி ஆகியோர் வாதாடினர்.

இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனம் செய்யப் பட்டதாக கூறப்படும் ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளதால் மனுதாரருக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளதாக கூறினர்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கெ னவே மாநில காவல் துறையால் மனுதாரர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதால் அவரை மீண்டும் கைது செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அவர்கள் வாதாடினர்.

அமலாக்க துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் பி.சித்தார்த்தன் வாதாடினார். சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற மனுதாரரின் வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில், மனுதாரர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியதாகவும் அதற்கான பணத்துக்கு முறையான ஆவணங்களை காட்டவில்லை என கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி என்.ரமேஷ், “நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு குந்தகம் விளைவித்தல், ஊழல், பொது மக்களின் பணத்தை மோசடி செய்வது, பொது நலனுக்கு எதிராக நடந்து கொள்வார்கள் மீது அமலாக்கத் துறை கைது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால், இதுபோன்ற தனி நபர்களுக்கு இடையேயான சொத்து விவகாரங்களில் கடுமை யான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம்” என கூறினார்.

மேலும், இதுபோன்ற வழக்கு களில் தீர்வு காண கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்கள் ஏற்கெனவே உள்ளதாக கூறி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *