மரணத்தை நோக்கிச் செல்கிறதா மக்களாட்சி? தேர்தல் ஆணையத்தின் மக்களாட்சி மீதான தாக்குதல் – பாணன்

7 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

லவாசா விவகாரம் 2019

2019 ஏப்ரல் 9 அன்று மக்களவைத் தேர்தலின் பரப்புரையின் போது மகாராட்டிரா மாநிலம் லத்தூரில் பிரதமர் மோடி புல்வாமா தியாகிகளின் பெயரில் வாக்குக் கேட்டார். இது வழிகாட்டுதல்களின் மீறல் என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கருதிய போதும், இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் மோடிக்கு “க்ளீன் சிட்” வழங்கப்பட்டது.

தேர்தலுக்குப் பிறகு மோடி அரசு லவாசாவின் குடும்பத்தினர் மீது வருமான வரி அறிவிக்கைகள் அனுப்பியது. இதனால் ஆகஸ்ட் 2020இல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்க இருந்த லவாசா பதவி விலகினார்.

உச்ச நீதிமன்ற வழக்கும்
அருண் கோயல் நியமனமும் (நவம்பர் 2022)

2015இல் தொடரப்பட்ட அனூப் பரன்வால் வழக்கு, 2022 நவம்பரில் அய்வர் அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நவம்பர் 18, 2022 அன்று விசாரணை நடந்த அதே நாளில் அருண் கோயலின் விருப்ப ஓய்வு, நால்வர் பட்டியல், பரிந்துரை, நியமனம் என அனைத்தும் ஒரே நாளில் முடிந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

உச்ச நீதிமன்றம் இதை “நாடகம்” எனக் கண்டித்தாலும் நியமனத்தை ரத்து செய்யவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் புதிய ஏற்பாடு (மார்ச் 2023)

மார்ச் 2, 2023 அன்று நீதிமன்றம்: பிரதமர் + எதிர்க்கட்சித் தலைவர் + தலைமை நீதிபதி ஆகிய மூவர் குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்ற ஏற்பாட்டை உருவாக்கியது.

மோடி அரசு ”தேர்தல் ஆணையர்கள் மசோதா 2023″அய் அவசரமாகக் கொண்டுவந்தது. தலைமை நீதிபதிக்குப் பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் அமைச்சர் சேர்க்கப்பட்டார். இதனால் குழுவில் இருவர் அரசுக்கு ஆதரவாளர்கள் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் காட்டியபோதும் கபட நாடகம் அதிகார ஆட்டத்தால் அரங்கேறியது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்யப்பட்டு மக்களவையில் 97 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

வாழ்நாள் பாதுகாப்பு
— பிரிவு 16

தேர்தல் ஆணையர்கள் அலுவல் கடமையில் செய்யும் எதற்கும் வாழ்நாள் முழுவதும் வழக்குத் தொடர முடியாது என்ற பாதுகாப்பு வழங்கப்பட்டது — இது நேர்மையற்ற செயல்களை ஊக்குவிக்கும் என்ற கருத்து எழுந்தது.

கட்டுரை, ஞாயிறு மலர்

அருண் கோயலின்
திடீர் பதவி விலகல் (2024)

பிப்ரவரி 2024இல் அனூப் சந்திர பாண்டே ஓய்வு; மார்ச் 2024இல் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் அருண் கோயல் (காலம் 2027 வரை இருந்தும்) பதவி விலகல்.

மார்ச் 2024இல் சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் நியமனம்.

2024 தேர்தல் முறைகேடுக் குற்றச்சாட்டுகள்

வாக்குப்பதிவு விவரங்கள் தாமதமாக வெளியீடு; “படிவம் 17சி” தரவு மறுப்பு.

மோடியின் 173 உரைகளில் 110இல் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் (மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல்).

பரூக்காபாத்தில் 32,000+ வாக்குகள் நீக்கம் (வெற்றி வித்தியாசம் 2,678); மீரட்டில் 61,365 நீக்கம் (வெற்றி வித்தியாசம் 10,585).

முஸ்லிம், தலித் பெரும்பான்மைப் பகுதிகளிலேயே அதிக நீக்கம்; போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

கட்டுரை, ஞாயிறு மலர்

முரண்நிகழ்வுகளும் நியமனமும் (2024–2025)

பாஜக 240 இடங்களுக்குச் சுருங்கியும், அதற்குப் பிறகு நடைபெற்ற மகாராட்டிரா (230/288), டில்லி (48/70), அரியானா தேர்தல்களில் பாஜக பெருவெற்றி — எதிர்க்கட்சிகள் முறைகேடு குற்றச்சாட்டு.

மகாராட்டிரா வாக்காளர் பட்டியலில் 5 ஆண்டுகளில் 32 லட்சம் புதிய வாக்காளர்கள். ஓய்வு பெற்ற 4 மாதத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஹெச்டிஎஃப்சி தலைவராக நியமனம் — இது நன்றியுணர்வு நியமனம் என்ற விமர்சனம்.

ராஜீவ் குமாருக்குப் பிறகு, 2025 பிப்ரவரி 19 அன்று ஞானேஷ் குமார் நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

யார் இந்த ஞானேஷ்குமார்?

இதற்குப் பிறகு நடந்ததைப் புரிந்துகொள்ள, ஞானேஷ் குமார் உண்மையில் யார் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஞானேஷ் குமார் 1988ஆம் கேரளம் கேடரைச் சேர்ந்த அய் ஏ எஸ் அதிகாரி ஆவார். 40 ஆண்டுகால பதவியில் அமித்ஷாவுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்

2019இல் ஜம்மு – காஷ்மீரில் இருந்து 370ஆம் சட்டம் நீக்கப்பட்டபோது, உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரப் பிரிவின் தலைவராக ஞானேஷ் குமார் இருந்தார். அதேபோல்,  அயோத்தியா வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 2020இல் உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியபோது, அதன் தலைவராகவும் அமித்ஷா இவரையே நியமித்தார். அதாவது, நீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட, உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு – காஷ்மீர் போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களைக் கையாண்ட, கூட்டுறவு அமைச்சகத்தின் பொறுப்பை வகித்த பின், ஓய்வு பெற்ற கையோடு தேர்தல் ஆணையத்திற்குள் வந்த ஓர் அதிகாரி இவர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையை ஞானேஷ் குமார் உருவாக்கினார். பின்னர், அந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் நடைபெற்றபோதும், மோடி அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஞானேஷ் குமார் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதன் பிறகு, மே 2022இல் ஒன்றிய கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த அமைச்சகமும் அமித்ஷாவின் கீழ்தான் இயங்குகிறது. ஜனவரி 31, 2024 அன்று ஞானேஷ் குமார் ஒன்றிய கூட்டுறவு அமைச்சக செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஓய்வுபெற்று வெறும் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அதாவது மார்ச் 15, 2024 அன்று அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 19, 2025 அன்று ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். முன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரி ஜி. தாமசனின் கூற்றுப்படி, இவரை பாஜகவில் சேர்ந்து போட்டியிட முன்பே ஞானேஷ் குமார் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

தேர்தல் ஆணையத்தின்
பாரபட்சமான நடவடிக்கைகள்

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் ‘முதலமைச்சர் பெண் வேலைவாய்ப்புத் திட்டத்தின்’ கீழ் தேர்தல் விதிமுறை மீறப்பட்டுப் பணம் விநியோகிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தெலங்கானாவில் எதிர்க்கட்சி அரசு செயல்படுத்திய இதே போன்ற திட்டத்தைத் தடுத்தது.

சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.அய்.ஆர்.) மற்றும் வாக்காளர் நீக்கம்: பீகார் (குறிப்பாக சீமாஞ்சல் பகுதி) மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘தர்க்கரீதியான முரண்பாடு’ என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் (குறிப்பாக சிறுபான்மையினர்) பெயர்கள் வாக்காளர் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டன. நாடு முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வரைவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உள்மோதல்களும், சட்டவிரோத மாற்றங்களும்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கிய முறைகேடுகள்

அரசிடம் அனுமதி பெறாமல் ‘படிவம் 6’இல்  புதிய சட்டவிரோதக் கேள்விகள் இணைக்கப்பட்டன. மேற்கு வங்கம் தொடர்பான வாக்காளர் விவகாரங்களில் முறையான அனுமதியின்றி மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. இசிஅய் நெட் (‘ECI-Net’) மென்பொருள் மூலம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளின் (ERO) அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, டில்லியிலுள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டன. இதை எதிர்த்த தேர்தல் ஆணையர்களின் புகார்களை நிர்வகித்த துணைத் தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த
தற்போதைய சர்ச்சைகளும்!

உள்தரப்பு மோதல்களும் அதிகார வரம்பு மீறல்களும்: தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி அய்.டி பிரிவின் கண்காணிப்பிலிருந்து அய்.ஏ.எஸ் அதிகாரியான சஞ்சய் குமார் நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி அமைச்சரவைக் செயலாளருக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, அந்த முடிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையர்கள் 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்; குறிப்பாக, 2026 ஏப்ரல் 16 அன்று ஒரே நாளில் நான்கு முறை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரே முழுப் பொறுப்பு என்று எதிர்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல்களைத் தேடும் வசதியின்மை

வாக்காளர் பெயர்களை எளிதில் தேடக்கூடிய (Searchable) வடிவத்தில் வழங்காமல், வெறும் ஸ்கேன் செய்யப்பட்ட PDF நகல்களையே தேர்தல் ஆணையம் பதிவேற்றுகிறது. நூற்றுக்கணக்கான பக்கங்களைச் சோதிப்பது கடினம் என்பதால், இது மக்களை ஏமாற்றும் செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், தர்க்கரீதியான முரண்பாடுகளால் (Logical Discrepancies) சந்தேகத்திற்குரியவர்களாகக் கருதப்பட்ட 1 கோடியே 36 லட்சம் வழக்குகள் மற்றும் அவற்றின் வகைகள் வெளியிடப்படவில்லை.

சிசிடிவி காட்சிகள் –
தேர்தல் விதிகளில் திருத்தங்கள்

டிசம்பர் 2024இல் அரியானா தேர்தல் சிசிடிவி காட்சிகளை வழங்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மோடி அரசாங்கம் 1961 தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து சிசிடிவி காட்சிகளைப் பெறும் உரிமையை ரத்து செய்தது. மேலும், தேர்தல் விதிகள் விதி 93 திருத்தப்பட்டு மின்னணு ஆவணங்களின் அணுகல் வரம்பிற்குட்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிட்டால் வாக்குச்சாவடி சிசிடிவி பதிவுகள் அழிக்கப்படும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அரசியல் நியமனங்கள்

தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாஜக அரசு பதவியேற்ற சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் தேர்தல் பணிகளைக் கவனித்த சிறப்புப் பார்வையாளர் டாக்டர் சுப்ரதா குப்தா முதலமைச்சரின் ஆலோசகராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் மேற்குவங்க அரசின் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதேபோல், அசாமின் நாகாம் மாவட்டத் தேர்தல் அதிகாரியாக இருந்த தேவாஷிஷ் சர்மா தனது பதவியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து, அதே தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக உரிமைகள் குறித்த கேள்வி?

நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையும், ஜனநாயக மக்கள் தீர்ப்பும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படாமல் பாஜக கட்சியின் அலுவலகம் போல் செயல்படுவதாகவும் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *