தேர்தல் ஆணையர்கள் நியமனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 09– சூரி பயாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், 2023-இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தேர்தல் ஆணையச் சட்டத்தின் பிரிவு 6-இன் படி, ஒவ்வொரு காலிப் பதவிக்கும் தலா 5 பேர் கொண்ட பெயர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது.

ஆனால், இங்கு அவ்வாறு பட்டியல் தயார் செய்யப்படவில்லை என்றும், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் யாரும் இதற்கு முன் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டதில்லை என்றும், சட்டப்பிரிவு 5-இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனவே, அவசர கதியில் மேற்கொள்ளப் பட்ட இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தங்களது பதவிகளில் தொடரச் சட்டப்பூர்வ அதிகாரம் என்ன என்பதை விளக்க உத்தரவிடும் வகையில் “கோ வாரண்டோ” பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *