மயிலாடுதுறை, ஆக. 11– தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் வழங்கிய நூல்களில் சுமார் ரூபாய் நான்கு லட்சம் மதிப்புள்ள 1,500 புத்தகங்களை குத்தாலம் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் க.அன்பழகன் மயிலாடுதுறை மாவட்ட மய்ய நூலகத்திற்காகக் கேட்டுப் பெற்று 10.8.2026 அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நூலகரிடம் அளித்தார்.
இந்நிகழ்விற்கு தி.மு.க உயர் மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையேற்க திமுக ஒன்றிய செயலாளர் முருகமணி, குத்தால நகர செயலாளர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக வாசகர் வட்ட தலைவர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஓய்வுபெற்ற வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வாசகர் வட்ட புரவலர் சே.ஆராமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிட வாசகர் வட்ட துணைத்தலைவரும், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவருமான இரெ.செல்லதுரை நன்றி கூறினார். இந்நிகழ்வில் கிளை நூலகர்கள், ஒய்வு பெற்ற துணை ஆட்சியர் மகாலிங்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க செல்வராஜ், ஒன்றிய கழக தலைவர் அ.சாமி துரை, தமுமுக பாஷீத், சாமி.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
