தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டில்லியில் மாபெரும் போராட்டம் ராகுல், பிரியங்கா உட்பட ஏராளமானோர் கைது

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 07- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டில்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (6.10.2026) பேரணி நடத்தினர். பின்னர் அவர்கள் 9 மணி நேர மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) நிறைவுப் பெற்று உள்ளது. இதில் சுமார் 13 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் நேற்று (6.10.2026) காலை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள 20 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் மற்றும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த சுமார் 300 எதிர்க்கட்சி உறுப்பினர்களு்ம பேரணியில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் பேரணியாக சென்றனர். அகில இந்திய வானொலி நிலையம் அருகில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுப்புகளின் மீது ஏறி முழக்கமிட்டனர். அப்போது ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏந்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முழக்கமிட்டார். பின்னர் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் உட்பட 300 நாடாளுமன்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்திக்க அனுமதி கோரினோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தை அழித்து வரு கின்றனர். அவர்கள் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை டில்லி காவல்துறையினர் வேனில் ஏற்றினர். ஆனால் ராகுலும் பிரியங்காவும் வேனில் இருந்து இறங்கி மீண்டும் வானொலி நிலைய வளாகத்தில் நுழைந்தனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 250 பேர் வானொலி நிலைய வளாகத்தில் தொடர் முற்றுகையில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இரவு 8 மணி அளவில் டில்லி காவல் துறையினர் வானொலி நிலைய வளாகத்தில் நுழைந்தனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்து அங்கி ருந்து வலுக் கட்டாயமாக வெளியேற் றினர். அவர்கள் அனைவரும் கிங்ஸ்வே முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. இதன் தொடர்ச்சியாக இண்டியா கூட்டணியின் கூட்டத்தை திமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. டில்லியில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற பேரணியையும் அந்த கட்சி புறக்கணித்தது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் டில்லி பேரணியை ஆம் ஆத்மியும் புறக்கணித்தது. ஒடிசாவின் பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் இண்டியா கூட்டணியில் இணையாமல் தனித்து செயல்பட்டு வந்தது. அந்த கட்சியின் தலைவர்கள் டில்லி பேரணியில் நேற்று பங்கேற்றனர்.

டில்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று 9 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இரவில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *