தருமபுரி, அக். 7- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 19.9.2026 அன்று தர்மபுரி மாவட்டத்தில் கழக மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக பழைய தருமபுரி எம்ஜிஆர் சிலை அருகில் மாலை 5.00 மணிக்கு தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு மகளிர் பாசறைச் செயலாளர் பெ.கோகிலா தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அனைவரை யும் வரவேற்று நிகழ்வின் இணைப் புரை ஆற்றினார். அரசியல் கட்சித் தோழர்களும் ஊர் பெருமக்களும் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.
கூட்டத்தில் கலந்து
கொண்ட தோழர்கள்
லட்சுமி, மாதம்மாள், கல்பனா, கோகிலா, பழனியம்மாள், சாலா, உமாமகேஸ்வரி, சந்திரா, பச்சியம்மாள், மீனாட்சி, பழனி யம்மாள், முனிரத்தினம், ராஜாத்தி.
சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் கலந்து கொண்ட தோழர்கள்.
ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பீம தமிழ் பிரபாகரன் (மாவட்டத் தலைவர்) கருப்புச்சட்டை மா.முனியப்பன், இளைய மாதன், (மாவட்டத் துணைத் தலைவர்), கு.சரவணன் (பொதுக்குழு உறுப்பினர்), இர கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), கரு பாலன், சிசுபாலன், பெ.மாணிக்கம், ஊமை காந்தி, மா.சுந் தரம், சி.ராமசாமி, ஊ.பிரபாகரன் அர்ஜுனன், ஊ.சி.சங்கர்.
உரையாற்றிய அரசியல் பெரு மக்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள்.
சிவலிங்கம் ஊராட்சி மன்றத் தலைவர், பழைய தருமபுரி, எம்.ஜி. சங்கர் (தவெக), பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி (திமுக), பொறியாளர் கேசவன், குண்டலப்பட்டி, சின்னசாமி, ஆ.விஜயகுமார், தே.மு.தி.க. முனுசாமி, வேல்முருகன், கார்த்திக்
உரையாற்றிய அனைவரும் தந்தை பெரியாருக்கு பின் இயக்கத்தை தமிழர் தலைவர் அவர்கள் கட்டிக் காத்து வருவது பற்றியும்,
94 வயது நெருங்குகிற கால கட்டத்திலும் அவருடைய ஓயாத பொது வாழ்க்கையை பாராட்டியும் பேசினார்கள்.
நிகழ்வின் இறுதியாக புதிய வரவாக இணைந்துள்ள காமலாபுரம் கு.சரவணனின் அவர்களின் இணையர் லட்சுமி அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் முடிந்தது.
