ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் முற்போக்கு அணியினர் வெற்றி

‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் முற்போக்கு அணியினர் வெற்றி –& ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டம்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாண வர்களின் அமைப்புகள் ஒன்றிணைந்து போட்டியிட்டு, ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யைத் தோற்கடித்துள்ளன.
மதவாத பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்கு அச்சார மாகவும், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர் தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு உற்சாகச் செய்தியாகவும் தலைநகர் டில்லியிலிருந்து வந்துள்ள இச் செய்தி அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து முற்போக்குச் சிந்தனையுடைய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவந்தது. இந்துத்துவக் குண்டர்கள் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து தாக்கினர். காவல்துறை ஒரு தலைப் பட்சமாக நடந்தது கொண்டது. பல்கலைக்கழக நிர்வாகம் செயலற்று நின்றது. ஆனாலும், அம் மாணவர்கள் இந்துத்துவ வெறியினருக்கு எதிராகத் தொடர்ந்து செயலாற்றிய வண்ணம் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம், அனைவரும் ஓரணியில் திரண்டால், மக்கள் விரோத சக்திகளைத் தோற் கடிக்கலாம் என்ற பாடத்தை மாணவர்கள் நடத்தியுள் ளனர். இந்த வெற்றி இந்தியா முழுமைக்கும் தொட ரட்டும். முதல்முறையாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தும் மாணவர் பேரவைத் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது இந்த வெற்றி மகுடத்தில், சமூகநீதிக்குக் கிடைத்த மற்றொரு வைரக் கல் ஆகும்.
மாணவர் பேரவைத் தலைவர் தனஞ்செய், பொதுச் செயலாளர் பிரியன்ஷி ஆர்யா, துணைத் தலைவர் அவிஜித் கோஷ், இணைச் செயலர் முகமது சஜித் ஆகியோருக்கும், உடன் நின்று ஒத்துழைத்த மாணவர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.3.2024
குறிப்பு: வெற்றி பெற்றுள்ள மாணவர்களைப் பாராட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *