கருநாடக மாநில அரசின் உணவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரிஸ்வான் அர்ஷத்தை 3.10.2026 அன்று அவரது இல்லத்தில் கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ, பெங்களூர்த் தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவரும், மேனாள தலைவருமான தி.மோ.தாமோதரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் கூறி, தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் வழங்கிய பெரிய இனிப்பு பெட்டகத்தை அளித்து மகிழ்ச்சினை பரிமாறிக் கொண்டனர். பெங்களூருவில் 28.2.2026இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ரிஸ்வான் அர்ஷத் அவர்களுக்கு வண்ணமிகு பயனாடை அணிவித்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
உணவுத் துறை அமைச்சருடன் கருநாடக திராவிடர் கழகத் தோழர்கள் சந்திப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
