சென்னையில் நடைபெறும் ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பங்கேற்பு!

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

நீட்டைக் கண்டித்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டத்தில் நேற்று (24.07.2026) மாலையும், இரவும் பங்கேற்று திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில திராவிட மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றினர். ‘நீட்’டின் வரலாறு, திராவிடர் கழகத்தின் போராட்டங்கள், தமிழ்நாட்டின் எழுச்சி ஆகியவை குறித்து உரையாற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *