நாய்ப்பிறவி, பன்றிப் பிறவி, சண்டாளப் பிறவி
சாந்தோக்கிய உபநிடதம்: 5.10.7
இங்கு நல்லொழுக்கத்துடன் இருந்தவர்கள் விரைவில் நல்ல பிறவியை அடைவார்கள் – பிரம்மணப் பிறவி, சத்திரியப் பிறவி அல்லது வைசியப் பிறவி. மேலும் இங்கு தீய நடத்தை கொண்டவர்கள் தீய பிறவியை அடைவார்கள் – நாய்ப் பிறவி, பன்றிப் பிறவி அல்லது சண்டாளப் பிறவி.-(7)
இதன் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள்,
Chandogya-upanishad: 5.10.7
तद्य इह रमणीयचरणा अभ्याशो ह यत्ते रमणीयां योनिमापद्येरन्ब्राह्मणयोनिं वा क्षत्रिययोनिं वा वैश्ययोनिं वाथ य इह कपूयचरणा अभ्याशो ह यत्ते कपूयां योनिमापद्येरञ्श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा ॥ ५.१०.७ ॥
tadya iha ramaṇīyacaraṇā abhyāśo ha yatte ramaṇīyāṃ yonimāpadyeranbrāhmaṇayoniṃ vā kṣatriyayoniṃ vā vaiśyayoniṃ vātha ya iha kapūyacaraṇā abhyāśo ha yatte kapūyāṃ yonimāpadyerañśvayoniṃ vā sūkarayoniṃ vā caṇḍālayoniṃ vā || 5.10.7 ||
TEXT:Then, those who have been of good conduct here would quickly attain good birth-birth of Brahmaņa, birth of Ksatriya, or birth of Vaisya. And those who have been of bad conduct here attain evil birth,-birth of a dog, the birth of a hog, or the birth of a Candala.-(7)
வேத உபநிடதங்களில் வர்ணம் ஜாதிகளைப் பற்றிய குறிப்புக்களே இல்லை எனும் நம்புகிறவர்கள் உண்டு. வர்ணம் மட்டுமல்ல, சண்டாள ஜாதியையும் மேலுள்ள சாந்தோக்கிய உபநிடதம் குறிப்பிடுகிறது.
உபநிடதங்களில் ஆன்மீகச் செய்திகள் உண்டு என்கிறவர்களுக்கு, வர்ணர்தையும், ஜாதியையும் நிலைநிறுத்தும் உபநிடதங் கள் யாருக்கானவை எனும் கேள்வி எழ வேண்டியது இயல்பு. தாழ்ந்த பிறவி உயர்பிறவியையும் சண்டாள ஜாதியானது நாய்ப் பிறவிகளுக்கு ஒப்பானது எனக்கூறும் உபநிடதங்களின் ஆன்மிகம் யாருக்கானது?
ஜாதிபேத பாகுபாட்டையும் வன்மத்தையும் ஒருசிலரின் ஆதிக்கத்தைக் கற்பிக்கும் வேத உபநிடதங்கள் சூத்திராதி சண்டாளர்களுக்கானது அல்ல என்பது நிரூபணம் ஆகிறது. யாராவது உபநிடதங்களில் உயர்ந்த ஆன்மிகக் கருத்துகள் தத்துவங்கள் உண்டு என்றால் அவை யாருக்கானது என வினா எழுப்புங்கள்.
வர்ணம் விட்டு வர்ணம் ஒருவரை ஒரே ஜென்மத்தில் மாற்றவே இயலாது என்பதை அனைத்து ஸநாதன நூல்களும் வலியுறுத்துகின்றன.
– தினகர ஞானகுருசாமி
