கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்! இழப்பீடு கோரும் குடும்பத்தினர்

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அரியலூர், அக்.7- கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வில், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை காந்திநகர் முதன்மைச் சாலையில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (61). இவர் செந்துறை – உடையார்பாளையம் சாலையில் வள்ளலார் நகரில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார்.

இந்த வீட்டின் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக, அக்டோபர் 2ஆம் தேதி செப்டிக் டேங்கிற்கு கான்கிரீட் போட்டு, அதற்கான பலகைகளை அகற்றும் பணியில் திருவாரூர் மாவட்டம், அலிவளம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (60), அதே மாவட்டம், கடாரங்கொண்டான் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (45) மற்றும் செந்துறை காந்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (48) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கழிவுநீர்த் தொட்டிக்குள் பாஸ்கர் இறங்கியபோது மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்பதற்காக தினகரன் செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோது அவரும் மயங்கி விழுந்தார். இருவரையும் மீட்பதற்காக இறங்கிய ராமச்சந்திரனும் மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

அரசிடம் கோரிக்கை

இதையடுத்து, இந்த நிகழ்வு குறித்து வழக்குப் பதிவு செய்த செந்துறை காவல் துறையினர், உயிரிழந்த மூவரின் உடல்களையும் உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 3.10.2026 அன்று உயிரிழந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், இந்த சம்வத்தை மனிதக் கழிவை மனிதர் அகற்றும் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இறந்தவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் அரியலூர் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். குறிப்பாக, செப்டிக் டேங்கில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறக்கப்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதால் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், வீட்டின் உரிமையாளரை கைது செய்ததை தொடர்ந்து, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரையும் கைது செய்ய வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, கோரிக்கைகளைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

6,574 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு!

சென்னை, அக். 7- குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்றிரவு (6.10.2026) வெளியிட்டது. இதன்மூலம் 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இவ்வாண்டுத் தேர்வு அட்டவணையின்படி அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு அக்.6 முதல் நவம்பர் 5 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களைத் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளர், பில் கலெக்டர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளில் 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *